பக்கம் எண் :

 இலங்கை காண் படலம் 505

6844.

'விரிகின்ற கதிர ஆகி, மிளிர்கின்ற மணிகள் வீச,

 

சொரிகின்ற சுடரின் சும்மை விசும்புறத் தொடரும்

தோற்றம்

 

அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி அமைத்த 

தீயால்

 

எரிகின்றதாயே காண், இக் கொடி நகர் இருந்தது 

இன்னும்!

 

விரிகின்ற  கதிர  ஆகி - பரந்து  வீசுகின்ற கிரணங்களை
யுடையனவாய்;  மிளிர்கின்ற   மணிகள் வீச-  விளங்குகின்ற
நவமணிகள் ஒளி வீசுவதனால்; சொரிகின்ற சுடரின் சும்மை -
பொழிகின்ற  ஒளித்தொகுதி; விசும்புறத்  தொடரும் தோற்றம்
- வானளாவித் தொடர்ந்து நிற்கின்ற தோற்றமானது; அரிவென்ற
வெற்றி   ஆற்றல்  மாருதி
- பகைமையை வென்று தீர்க்கும்
வெற்றித் திறனுடைய அநுமான் ஆனவன்; அமைத்த  தீயால் -
(தன்  வாலால்)  இட்ட  தீயால்;  இக்கொடி  நகர்  இன்னும்
எரிகின்றதாயே
- இந்தக்  கொடிகள் சூழும்  இலங்கை மாநகர்
இப்போதும் எரிந்து கொண்டிருப்பது போலவே; இருந்தது காண்
- இருப்பதைப் பார்ப்பாயாக.
 

மணிகள்  சிந்தும்  ஒளித்தொகுதி, இலங்கை அனுமன் இட்ட
தீயால்  இன்னும்  எரிந்து  கொண்டிருப்பது போன்றே தோற்றம்
அளித்ததாகக் கற்பித்தார். 

(9)
 

6845.

'மாசு அடை பரந்த மான மரகதத் தலத்து வைத்த

 

காசு அடை சமைந்த மாடம், கதிர் நிறக் கற்றை 

சுற்ற,

ஆசு அறக் குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் 

ஆக, 

பாசடைப் பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப, 

பாராய்! 

 

மாசு   அடை  - அழுக்கு நுழையாமல் அடைக்கப் பெற்ற; 
பரந்தமான மரகதத்தலத்து  வைத்த
- விரிந்து சிறந்த மரகதத்
தலத்தில் கட்டப்பட்ட;காசு அடை சமைந்தமாடம்- பொன்னால்
நெடுக  வேயப்பட்ட   மாடங்கள்;  கதிர் நிறக் கற்றைசுற்ற-
சூரியனுடைய மை போன்ற ஒளிக்கற்றைகள்  சூழுமாறு  அமைய;
ஆசு அறக் குயின்ற- குற்றம் நீங்க அமைக்கப்பெற்ற; வெள்ளி
அகல்மனை
- வெள்ளியால் அமைந்த விரிந்த மனைகள்; அன்னம்