ஆக - அன்னம் போன்று ஒளிர; பாசு அடைப் பொய்கை - பசிய இலைகள் பரவிய பொய்கைகளில்;பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய்! - பூத்துக் கிடக்கிற தாமரை மலர்களைப் போன்றிலங்குவதைப் பாராய்! |
காசு-காரிய ஆகுபெயராய் பொன்னைக் குறித்தது.இங்கு அடை - நெருக்கத்தைக் குறித்தது. பாசு அடை-இங்கு அடை இலையைக் குறித்தது. |
மரகதத்தளம் பொய்கை யாகவும், செம்பொற் கூரைமாடங்கள் செந்தாமரைகளாகவும், அவற்றின் மீதுள்ள வெள்ளி வீடுகள், செந்தாமரை மலர்களின் மேலுள்ள அன்னங்களாகவும் மனக்கண்ணால் கண்டு நமக்கும் காட்டுகின்றார் கவிஞர் பிரான். அடை எனும் சொல் வெவ்வேறு பொருள்களில் அமைய வந்த திரிபு அணியாம். |
(10) |
6846. | 'தீச் சிகை சிவணும் சோதிச் செம் மணிச் செய்த |
| தூணின் |
| தூச் சுடர் மாடம் ஈண்டித் துறுதலால், கருமை |
| தோன்றா |
| மீச் செலும் மேகம் எல்லாம், விரி சுடர் இலங்கை |
| வேவ, |
| காய்ச்சிய இரும்பு மானச் சேந்து ஒளி கஞல்வ, |
| காணாய்! |
|
தீச் சிகை சிவணும் சோதி- அக்கினிக் கொழுந்து போலும் ஒளியினையுடைய; செம்மணிச் செய்ததூணின் - சிவந்த மாணிக்கங்களைப் பதித்துச் செய்யப் பெற்ற தூண்கள் நாட்டப்பெற்ற; தூச்சுடர் மாடம் ஈண்டித் துறுதலால் - தூய்மையான ஒளிமிக்க மாடங்கள் நெருங்கிச் சுடர் விடுதலால்; கருமை தோன்றா - கருநிறம் தோன்றாமல்; மீச்செலும் மேகம் எல்லாம்- ஆகாயத்தில் பரவிச் செல்லும் மேகங்கள் எல்லாம்; விரிசுடர் இலங்கை வேவ- விரிந்து பரவும் ஒளியுடைய இலங்கை (அநுமனால் தீயிடப்பட்ட அன்று) எரிந்து போகும்போது; காய்ச்சிய இரும்பு மான- (அப்பெருந்,தீயிற்) காய்ச்சப் பட்ட இரும்பினைப் போல; சேந்து ஒளி கஞல்வ காணாய்- செந்நிறம் பெற்று ஒளி மிக விளங்குவதைக் காண்பாயாக. |
தீச்சிகை - அனற்கொழுந்து. சிவணல் - ஒத்தல். இலங்கை உலைக்கூடமாகவும் மாடங்கள் உலையாகவும், செம்மணிகள் பதித்த |