| வீசு பொன் கொடிகள் எல்லாம், விசும்பினின் விரிந்த |
| மேக- |
| மாசு அறத் துடைத்து, அவ் வானம் விளக்குவ |
| போல்வ மாதோ! |
|
பூசல் வில் குமர ! - போரிடற்குரிய வில் ஏந்தும் குமரனே! புகழ் அற விளங்கும் பொற்பின்- குற்றம் நீங்குமாறு விளங்கும் அழகினையுடைய; காசு உடைக் கதிரின் கற்றை- (கொடிக்கம்பங்களில் பதிக்கப் பெற்றுள்ள இரத்தின) மணிகளால் ஆகிய ஒளித் தொகுதிகளையுடையனவாய்; கால்களால் கதுவுகின்ற- காற்றால் பற்றப்பட்டு; வீசுபொன் கொடிகள் எல்லாம்- அசைகின்ற அழகிய கொடிகள் யாவும்; விசும்பின் விரிந்த- விண்ணில் பரவியுள்ள; மேக மாசு அறத்துடைத்து- மேகங்கள் என்னும் அழுக்கினைத்துடைத்தெடுத்து; அவ்வானம் விளக்குவ போல்வ நோக்காய்- அவ்விண்ணைத் துலக்குவன போன்றுள்ளமையைக் காண்பாயாக. |
புகர்-குற்றம். |
(13) |
6849. | 'நூல் படத் தொடர்ந்த பைம் பொன் சித்திரம் |
| நுனித்த பத்திக் |
| கோல் படு மனைகள் ஆய குல மணி எவையும் |
| கூட்டி, |
| சால்பு அடுத்து, அரக்கன் மாடத் தனி மணி |
| நடுவண் சார்த்தி, |
| மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று |
| உளது-இம் மூதூர். |
|
இம் மூதூர்- இத்தொன்மை வாய்ந்த இலங்கை; நூல் படத் தொடர்ந்த- (சிற்பிகளால் கோணல் என்பதேயின்றி) நூல் இட்டு நேர் வரிசையில் உள்ளனவும்; சித்திரம் நுனித்த பத்தி - ஓவியங்கள் நுட்பமாகத் தீட்டப்பட்ட வரிசையானவையும் ஆகிய; கோல் படு மனைகள் ஆய குலமணி எவையும் கூட்டி- அழகமைந்த வீடுகள் என்னும் சிறந்த மணிகள் யாவற்றையும் இணைத்து; சால்பு அடுத்து- (ஒரு கோவையாக) பொருந்தும்படி அமைத்து; அரக்கன் மாடத் தனிமணி நடுவண் சார்த்தி - அரக்கர் கோனாகிய இராவணனது அரண்மனையாகிய நாயகமணியினை நடுவிலே சார வைத்து; மால் |