6851. | 'வீர ! நீ பாராய்-மெல்லென் பளிங்கினால் |
| விளங்குகின்ற, |
| மாரனும் மருளச் செய்த மாளிகை, மற்றோர் சோதி |
| சேர்தலும் தெரிவ; அன்றேல், தெரிகில; தெரிந்த |
| காட்சி |
| நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை. |
|
வீர ! - வீரனாகிய இலக்குவனே! மெல் என் பளிங்கினால் விளங்குகின்ற- மெல்லிய பளிங்குக் கற்களினால் ஒளிர்கின்றனவும்; மாரனும் மருளச் செய்த மாளிகை - மன்மதனும் மயங்குமாறு அமைந்துள்ளனவுமான மாளிகைகள்; மற்று ஓர் சோதி சேர்தலும் தெரிவ - வேறு ஓர் ஒளி (தம்மீது) பட்டவுடன் கண்ணுக்குத் தெரிவனவாயும்; அன்றேல் தெரிகில - ஒளிபடாவிடில், கண்ணுக்குத் தெரியாதனவுமாயும்; தெரிந்த காட்சி - விளங்குகின்ற காட்சியானது; நீரினால் இயன்ற என்ன - நீரினால் அமைந்தவை (இவை) என்னுமாறு; நிழல் எழுகின்ற நீர்மை நீ பாராய்- ஒளிதோன்றுகின்ற தன்மையை நீ பார்ப்பாயாக. |
தனக்கென்று ஒரு தனி நிறமில்லாது, ஆன்மாவைப் போலச் சார்ந்ததன் வண்ணம் ஆவது நீர்க்கு இயல்பு. பம்பையின் நீரினைப் பளிங்குக்கு முன்னும் (3710) உவமிப்பார். |
(16) |
6852. | 'கோல் நிறக் குனி வில் செங் கைக் குமரனே! |
| குளிர் வெண் திங்கள் |
| கால் நிறக் கதிரின் கற்றை தெற்றிய ஆய காட்சி |
| வால் நிறத் தரளப் பந்தர், மரகதம் நடுவண் வைத்த, |
| பால் நிறப் பரவை வைகும் பரமனை நிகர்ப்ப, |
| பாராய்! |
|
கோல்நிறக் குனிவில் செங்கைக் குமரனே! - அம்பினையும் ஒளியினையும் உடைய வளைந்த வில்லினை ஏந்திய சிவந்த கரங்களையுடைய குமாரனே! குளிர் வெண் திங்கள் கால் நிறக் கதிரின் கற்றை - குளிர்ந்த வெள்ளைச் சந்திரன் உமிழ்கின்ற வெள்ளை நிறக் கதிர்களின் தொகுதிகள்;தெற்றிய அனைய காட்சி - இடை விட்டுவிட்டுப் பின்னியது போன்ற தோற்றம் கொண்ட;வால் நிறத் தரளப் பந்தரர் நடுவண் வைத்த மரகதம் - வெண்ணிற முடைய முத்துப் பந்தலின் நடுவே வைக்கப் பெற்றுள்ள மரகத மணிகளின் தொகுதி; பால் நிறப் பரவை வைகும்- வெள்ளை நிறப் |