பக்கம் எண் :

 இலங்கை காண் படலம் 511

பாற்கடலில்  பள்ளி  கொள்ளும்; பரமனை நிகர்ப்ப பாராய்-
பரந்தாமனை ஒத்திருப்பதைப் பார்ப்பாயாக.
 

கோல் - அம்பு. நிறம் - ஒளி. வெண்ணிறம் உடைய முத்துப்
பந்தர்.  திருப்பாற்  கடலுக்கும்,  பச்சை  நிறம்  உடைய  மரகத
மணியின் தொகுதி.  பாற்கடலின்  இடையுறங்கும்  திருமாலுக்கும்
உவமைகள் ஆயின. 
 

(17)
 

6853.

'கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே! 

கொள்ள நோக்காய்--

 

நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர், ஓர் 

நாகர் பாவை,

காள வார் உறையின் வாங்கும் கண்ணடி, விசும்பில்  

கவ்வி

வாள் அரா விழுங்கிக் காலும் மதியினை நிகர்த்த 

வண்ணம்.

 

கோள்  அவாவு அரிஏறு அன்ன  குரிசிலே ! - தன்னை
எதிர்ப்பாரைக்  கைக்கொண்டு   வெல்ல  விரும்பும் ஆண்சிங்கம்
போன்ற இலக்குவனே!நாள் அவாம் மின் தோய் மாடத்தும்பர்
-  விண்மீன்கள்   ஒளியைப்   பெற   விரும்புமாறு  மின்னுகின்ற
மாடங்களின் உச்சியில்; ஓர் நாகர் பாவை - ஒரு நாக உலகத்து
மங்கை; காளவார்  உறையின் வாங்கும்  கண்ணடி- கருமை
நிறமுள்ள   நீண்ட  உறையிலிருந்து   எடுக்கும் (வட்ட  வடிவக்)
கண்ணாடியானது; வாள் அரா விழுங்கிக் காலும் - ஒளியுடைய
இராகு   கேது   என்னும் பாம்புகளால் விழுங்கி உமிழப் பெறும்;
மதியினை  நிகர்த்த   வண்ணம்   கொள்ள  நோக்காய்! -
சந்திரனை ஒத்து விளங்கும் தன்மையை நன்கு பார்ப்பாயாக.
 

கோள்-கொள்ளுதல். முதல் நிலைத் தொழிற்பெயர். எதிர்க்கும்
உயிர்களைத்  தப்பாமல்  கொல்லும் தன்மையால்,  சிங்க ஏற்றுக்கு
இலக்குவன் உவமையானான். 
 

(18)
 

6854.

'கொற்ற வான் சிலைக் கை வீர ! கொடி மிடை 

மாடக் குன்றை

 

உற்ற வான் கழுத்தவான ஒட்டகம், அவற்றது 

உம்பர்ச்

 

செற்றிய மணிகள் ஈன்ற சுடரினைச் செக்காரத்தின்

 

கற்றை அம் தளிர்கள் என்னக் கவ்விய நிமிர்வ,

காணாய்!