கொற்றவான் சிலைக்கை வீர ! - வெற்றியையே ஏந்தும் பெருமைக்குரிய வில் ஏந்தும் கைகளையுடைய வீரனே! கொடிமிடை மாடக் குன்றை உற்ற- கொடிகள் நிறைந்த குன்றம் போலும் மாடங்களை எட்டுகின்ற;வான் கழுத்த ஆன ஒட்டகம்- உயர்ந்து நீண்ட கழுத்துக்களையுடைய ஒட்டகங்கள்; அவற்றது உம்பர் - அம்மாடங்களின் மேல்; செற்றிய மணிகள் ஈன்ற சுடரினை - பதிக்கப்பெற்ற மணிகள் உமிழ்ந்த ஒளிக்கதிரின் கூட்டத்தை; செக்காரத்தின் கற்றை அம்தளிர்கள் என்ன - தேமா மரங்களின் கொத்துக்களான அழகிய தளிர்கள் எனக் கருதி; கவ்விய நிமிர்வ காணாய் - கவ்வுவதற்காக நிமிர்கின்றவற்றைக் காண்பாயாக. |
செக்காரம்-தேமாமரம். |
(19) |
6855. | 'வாகை வெஞ் சிலைக் கை வீர ! மலர்க் குழல் |
| புலர்த்த, மாலைத் |
| தோகையர் இட்ட தூமத்து அகிற் புகை முழுதும் |
| சுற்ற, |
| வேக வெங் களிற்றின் வன் தோல் மெய்யுறப் |
| போர்த்த தையல்-- |
| பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையைப் |
| பாராய்! |
|
வாகை வெஞ்சிலைக்கைவீர- வெற்றியையே ஏந்தும் கொடிய வில்லையேந்தும் கைகட்குரிய வீரனே! மாலை மலர்க்குழல் புலர்த்த- மாலைப்பொழுதில் (தங்கள்) மலர் சூடிய கூந்தல்களை உலர்த்துவதற்காக; தோகையர் இட்ட - பெண்கள் மூட்டிய; தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற- நறும்புகை வகையைச் சார்ந்த அகிலின் புகை முழுவதும் சூழ்ந்து கொண்டதனால்; வேக வெங்களிற்றின் - விரைந்து செல்லும் வன்மையுடைய மதயானையின்;வன்தோல் மெய்யுறப் போர்த்த- வலியதோலினை மேனியில் நன்கு போர்த்துக் கொண்ட; தையல் பாகனின் - உமையொரு கூறனாகிய சிவபெருமானைப் போல; பொலியத் தோன்றும் - அழகுறத் தோன்றுகிற; பவள மாளிகையைப் பாராய்! - செம்பவழத்தாலான மாளிகைகளைப் பார்ப்பாயாக. |
பவழ மாளிகை செம்மேனி அம்மானாகிய சிவபிரானையும், அம்மாளிகையைச் சூழ்ந்திருந்த அகிலின் கரும்புகை, அப்பெருமான் போர்த்துள்ள யானைத்தோல் போர்வைக்கும் உவமைகள் ஆயின. |
(20) |