6856. | 'காவலன் பயந்த வீரக் கார்முகக் களிறே ! சுற்ற |
| தேவர்தம் தச்சன் நீலக் காசினால் திருந்தச் |
| செய்தது. |
| ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த |
| பாவ பண்டாரம் அன்ன, செய்குன்றம் பலவும், |
| பாராய் ! |
|
காவலன் பயந்த வீரக் கார்முகக் களிறே ! - தசரத மன்னன் பெற்ற வீரமிக்க வில் ஏந்தும் யானை போன்றவனே! கற்ற தேவர்தம் தச்சன் - கல்வியிற் சிறந்த தேவர்களின் தச்சனான விசுவகன் மாவினால்; நீலக் கல்லினால் திருந்தச் செய்தது - நீல மணிக்கற்களினால் செப்பமுறச் செய்யப் பெற்றனவும்; ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் - ஈகை என்பதனையே அறியாத உள்ளமுடைய அரக்கர்கள்; ஈட்டி வைத்த - திரட்டி வைத்த; பாவ பண்டாரம் அன்ன- பாவத்தின் சேமிப்புக் கிடங்குகளைப் போன்ற; செய்குன்றம் பலவும் பாராய்- செய்குன்றங்கள் பலவற்றையும் காண்பாயாக. |
கார்முகம் - வில். காவலன் பயந்த வீரக் கார் முகக் களிறு - இல்பொருள் உவமை. ஈகை - மன இரக்கத்தின் அடிப்படையில் எழும் அறம். ஆதலால் "இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர்" (கம்ப.) ஆகிய அரக்கர், ஈவது தெரியா உள்ளத்தினர் ஆயினர். ஈயாமல் அரக்கர் ஈட்டிய செல்வம் எல்லாம் அவர் பாவ பண்டாரத்தில் திரள்கின்றன என்று அழகுற மொழிந்தார். பாவத்தின் நிறம் கருமையாதலின், நீலக்கற்களால் ஆன செய்குன்றங்களைப் பாவ பண்டாரம் எனப் பொருத்தமுற மொழிந்தார். |
(21) |
6857. | 'பிணை மதர்த்தனைய நோக்கம் பாழ்பட, பிடியுண்டு, |
| அன்பின் |
| துணைவரைப் பிரிந்து போந்து, மருங்கு எனத் |
| துவளும் உள்ளப் |
| பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர், பருவம் |
| நோக்கும் |
| கண மயில் குழுவின், நம்மைக் காண்கின்றார் |
| தம்மைக் காணாய்! |
|
பிணை மதர்த்து அனைய நோக்கம்- களிப்பேறியது போன்ற அழகிய பார்வை; பாழ் பட- பொலிவு கெட; பிடியுண்டு - |