(அரக்கராற்) சிறையிடப் பெற்றதனால்; அன்பின் துணைவரைப் பிரிந்து போந்து- அன்பிற்குரிய தம் கணவன்மார்களைப் பிரிந்து வந்து; மருங்கு எனத் துவளும் உள்ளம்- இடை போல வருந்தும் மனத்தையும்; பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் - பாம்பின் படமோ என்று ஐயுறத்தக்க நிதம்பத்தையுமுடைய (தேவ) மாதர்கள்; பருவம் நோக்கும் - (தம் வாட்டம் போக்கும்) கார் காலத்தினை (விருப்புடன்) எதிர்நோக்கும்; கணமயில் குழுவின் - திரண்ட மயில்களின் கூட்டம் போல; நம்மைக் காண்கின்றார் தம்மை நோக்காய் - நம்மை (விருப்பத்தோடு) எதிர்நோக்குகின்றார்கள்; அவர்களை (நீயும்) காண்பாயாக. |
மதர்த்தல்-களித்தல். |
(22) |
6858. | 'நாள்மலர்த் தெரியல் மார்ப! நம் பலம் காண்பான், |
| மாடத்து |
| யாழ் மொழித் தெரிவைமாரும் மைந்தரும் |
| ஏறுகின்றார், |
| "வாழ்வு இனிச் சமைந்தது அன்றே" என்று மா |
| நகரை எல்லாம் |
| பாழ்படுத்து இரியல் போவார் ஒக்கின்ற பரிசு |
| பாராய்!' |
|
நாள் மலர்த் தெரியல் வீர! - அன்றலர்ந்த மலர்களால் ஆன மாலையணியும் மார்புடையானே! நம் பலம் காண்பான்- நமது வலிமையைக் காணும் பொருட்டு; யாழ் மொழித் தெரிவைமாரும் மைந்தரும் - யாழ் போன்ற மொழி பேசும் (தேவ) மகளிரும் ஆடவரும்; மாடத்து ஏறுகின்றார் வாழ்வு இனிச் சமைந்தது அன்றே! - மாடங்களில் ஏறுகின்றார் "நமக்கு இனி நல்வாழ்வு அமைந்து விட்டதன்றோ"; என்று மாநகரையெல்லாம்- எனக்கருதி, இலங்கை மாநகரை எல்லாம்; பாழ் படுத்து - பாழாகப் போட்டுவிட்டு;இரியல் போவார்- ஓடிப் போவாரை ஒக்கின்ற பரிசு பாராய்!-போன்ற தன்மையைக் காண்பாயாக! |
இலங்கையின் பணிகள் யாவும் தேவர்கள் புரிவதால், இவர்கள் வெளியேறின் இலங்கை பாழ்படும் என்பார். "பாழ்படுத்து இரியல் போவார்" என்றார். |
(23) |