உத்தரீகத்துக்கு அருவி ஒப்பு. 'வேறுபல் துகிலின் நுடங்கி... இழுமென இழிதரும் அருவி." (திருமுரு. 295-316)" அவிர்துகில் புரையும் அவ்வெள் அருவி" (குறிஞ்சிப். 55) "ஓயா அருவித்திரள் உத்தரீயத்தை ஒப்ப" (4780) மலைக்கு இராவணன் மார்பும். அருவிக்கு அவன் மேலாடையும் ஒப்பாம். |
(5) |
6865. | வானகத்தினில் உருப்பசி, வாசத் |
| தேன் அகத் திரு திலோத்தமை, செவ் வாய் |
| மேனகைக் குல அரம்பையர், யாரும் |
| சானகிக்கு அழகு தந்து, அயல் சார, |
|
வானகத்தினில் உருப்பசி - வானகத்திற்குரிய ஊர்வசியும்; வாசத் தேன் அகத்திரு திலோத்தமை - மணம் மிக்க தேனுடைய தாமரை மலரில் வாழும் திருமகள் போன்ற திலோத்தமையும்; செவ்வாய் மேனகை - சிவந்த வாயினளான மேனகையும்; குல அரம்பையர் - குலத்திற் சிறந்த அரம்பையும்; யாரும் - அவர் போன்ற தேவ மாதர் அனைவரும்; சானகிக்கு- சீதாதேவிக்கு; அழகு தந்து - (மேலும்) அழகு தருவதற்காக; அயல் சார- (இராவணன்) அருகே சார்ந்து நிற்கவும். |
தந்து - தர. எச்சத்திரிபு. இராவணனின் புறத்தே நின்ற ஊர்வசி, திலோத்தமை முதலிய தேவமாதர்கள் இராவணன் அகத்தே நின்ற சீதா தேவியின் அழகை உயர்த்திக்காட்ட உதவினர் என்பது கவிஞர் குறிப்பு. "அரம்பையர் குழாம் புடைசுற்ற" எனக் காட்சிப் படலத்தின் பாடலை (5147) இங்கு நினைவு கூர்க. |
(6) |
6866. | வீழியின் கனி இதழ், பணை மென் தோள், |
| ஆழி வந்த அர மங்கையர், ஐஞ்ஞூற்று- |
| ஏழ் இரண்டினின் இரண்டு பயின்றோர், |
| சூழ் இரண்டு புடையும் முறை சுற்ற, |
|
வீழி இன் கனி இதழ் - வீழிக்கனியினைப் போன்ற இனிய இதழ்களையும்; பணை மென் தோள்- மூங்கிலைப் போன்ற தோள்களையும் உடையவராய்; ஆழி வந்த அரமங்கையர்- பாற்கடல் கடையும்போது தோன்றிய தேவ மாதர்கள்; ஐஞ்ஞூற்று ஏழ் இரண்டினில் இரண்டு- பதினாலாயிரவர்; பயின்றோர் - (கலைகள் பல) பயின்றோர்;இரண்டு புடையும் சூழ் முறை சுற்ற - (இராவணன்) இருமருங்கும் முறைப்படி சூழ்ந்து வர... |