கடல் கடைகையில் தேவமாதர் பலர் எழுந்தனர் என்பது முன் (940) கூறப்பட்டது. ஐஞ்ஞூற்று ஏழ் இரண்டினில் இரண்டு 500x7x2x2 = 14,000. பயின்றோர் (எண்ணிக்கை) அமைந்தோர் எனினுமாம். வீழியின்கனி-சிவப்பு நிறமுடைய ஒருகனிவகை. |
(7) |
6867. | முழை படிந்த பிறை முள் எயிறு, ஒள் வாள் |
| இழை படிந்த இள வெண் நிலவு ஈன, |
| குழை படிந்தது ஒரு குன்றில், முழங்கா |
| மழை படிந்தனைய தொங்கல் வயங்க, |
|
முழை படிந்த பிறை- குகையிற் படிந்துள்ள பிறை நிலாப் போன்று; முள் எயிறு(இராவணன் உதடுகளின் இருமருங்கும்) கோரைப்பற்கள்; ஒள்வாள் - ஒள்ளிய ஒளியை; இழை படிந்த- அணிகளில் படிந்துள்ள; இளவெண் நிலவுஈன- மெல்லிய வெள்ளைக்கற்றைகளோடு வீசவும்; குழை படிந்தது ஒருகுன்றில் - குண்டலங்களை அணிந்த ஒரு மலையிலே; முழங்கா மழைபடிந்தனைய - முழங்குதல் செய்யாத மேகம் படிந்தாற் போன்று; தொங்கல் வயங்க- நீல மணி மாலைகள் (தோள்களில்) ஒளி வீசவும்... |
இராவணன் கோரைப் பற்கள் இதழ்களின் இருமருங்கும் மேல் நோக்கி வளைந்து பிறை போன்று விளங்கின என்பதாம். குண்டலம் அணிந்த மலை - இல்பொருள் உவமை மலை மேல் மேகம் படிந்திருப்பது போன்று, இராவணன் தோள்மேல் நீலமணி மாலைகள் கிடந்தன என்பதாம். |
(8) |
6868. | ஓத நூல்கள் செவியின்வழி, உள்ளம் |
| சீதை சீதை என ஆர் உயிர் தேய, |
| நாத வீணை இசை நாரதனார் தம் |
| வேத கீத அமுது அள்ளி விழுங்க, |
|
நாத வீணை இசை நாரதனார் தம் - இனிய நாதம் எழுப்பவல்ல வீணையுடைய நாரதமாமுனிவர் தம்முடைய; வேத கீத அமுது- சாம வேதத்தின் இசையெனும் அமுதத்தை (இசைக்க); அள்ளி விழுங்க- அள்ளி அள்ளி (செவிவாயால்) விழுங்கியும்; நூல்கள் ஓத - (அறிஞர்கள்) (உயர்ந்த) நூல்களை ஓத(க்கேட்டும்); செவியின் வழி- (இவை யாவும்) உள்ளத்துள்ளே நுழையாமல் செவி வழியாகவே (சென்று கொண்டிருக்க); உள்ளம் சீதை சீதையென்று- இராவணனது உள்ளமோ சீதை சீதை என்று |