(ஓயாமல்) செபித்துக் கொண்டிருப்பதால்; ஆருயிர் தேய- அவனது உயிரோ (காம ஆசையால்) தேய்ந்து கொண்டிருக்கவும்... |
"சீதை, சீதை" எனும் அடுக்கு இராவணன் பிராட்டியிடம் கொண்ட பேராசையின் தவிப்பினை உணர்த்தி நின்றது. |
(9) |
6869. | வெங் கரத்தர், அயில் வாளினர், வில்லோர், |
| சங்கரற்கும் வலி சாய்வு இல் வலத்தோர், |
| அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர், |
| பொங்கு அரத்த விழியோர் புடை சூழ, |
|
வெங்கரத்தர்- கொடிய கரங்களை யுடையவர்களும்; அயில் வாளினர் - வேலும் வாளும் ஏந்தியவர்களும்; வில்லோர்- வில்லினைத் தாங்கியவர்களும்; சங்கரற்கும் வலிசாய்வு இல்வலத்தோர்- சிவ பெருமானுக்கும் (எதிர்த்தால்) வலிமை குன்றாத பலமுள்ளவர்களும்; அங்கு அரக்கர் - (ஆகிய) அரக்கர்கள் அங்கே; சதகோடி அமைந்தோர் - நூறு கோடி எண்ணிக்கை யமைந்தவர் (ஆயினர்); பொங்கு அரத்த விழியோர் - குருதி பொங்குகிறது என்னுமாறு, சினத்தால் சிவந்த விழியுடையோர்களுமாகிய அவ்வரக்கர் குழாம்; புடைசூழ - (இராவணன்) இருமருங்கும் சூழ்ந்து நிற்கவும்... |
(10) |
6870. | கல்லில் அம் கை உலகம் கவர்கிற்போர், |
| நல் இலங்கை முதலோர், நவை இல்லோர், |
| சொல்லில் அங்கு ஓர் சதகோடி தொடர்ந்தோர், |
| வில் இலங்கு படையோர், புடை விம்ம, |
|
அம்கை - அழகிய கைகளால்; கல்லில்- அகழ்ந்தெடுப்பது என்றால்; உலகம் கவர்கிற்போர் - உலகங்களையே கவர்ந்தெடுக்க வல்லவரும்; நல் இலங்கை முதலோர்- அழகிய இலங்கைக்கு முதற்குடி மக்களாய் தொன்று தொட்டு வாழ்பவரும்; நவை இல்லோர் - (தம் மன்னனுக்கு) எந்தக் குற்றமும் புரியாதவரும்; சொல்லில் - எண்ணிக் கூறுமிடத்து; அங்கு ஒர்சத கோடி தொடர்ந்தோர் - அங்கே, ஒரு நூறு கோடியர் எனத் தொடர்பவரும்; வில் இலங்கு படையோர் - வில்கள் (தோளில்) மின்ன வருகிற) படை வீரர்கள்; புடை விம்ம - இருமருங்கும் புடை சூழவும்... |