பக்கம் எண் :

522யுத்த காண்டம் 

கல்லில் தோண்டினால்... இலங்கையிலுள்ள படையரக்கர்களின்
பெருமை   கூறியவாறு   "ஒருவரே  வல்லவர்; ஓர்  உலகத்தினை 
வெல்ல" (9310)    என்பர்    மேலும்.    அரக்கர்   உலகுக்குப்
பெருங்குற்றங்கள் பல  இழைப்பவர் ஆயினும்,  படைவீரர்  என்ற
முறையில்,  தம்  தலைவனுக்கு  எக்குற்றமும் இழையாமல்  போர்
புரிபவர் ஆதலின் "நவை இல்லார்" என்றார். நவை-குற்றம். 
 

(11)
 

6871.

பார் இயங்குநர், விசும்பு படர்ந்தோர்,

வார் இயங்கு மழையின் குரல் மானும் 

 

பேரி, அங்கண் முருடு, ஆகுளி, பெட்கும்

 

தூரியம், கடலின் நின்று துவைப்ப,
 

பார்  இயங்குநர் - மண்ணில் இயங்குபவர்களும்; விசும்பு
படர்ந்தோர்
-   வானில்   சஞ்சரிப்பவர்களும்  ஆகிய; வார்
இயங்கு   மழையின்  குரல் மானும்
- நீருடன் அரக்கர்கள்
உலாவும் மேகத்தின்   ஒலியைப்   போன்று   ஒலிக்கும்; பேரி,
அங்கண் முருடு, ஆகுளி, பெட்கும்தூரியம்
  - பேரிகையும்,
அழகிய   கண்களையுடைய   முருடும்,  சிறு பறையும்  ஆகிய
யாவரும் விரும்பும் வாத்தியங்களை; கடலின் நின்று துவைப்ப
- கடல் போன்று முழக்கவும்...
 

வார -  நீர்.    "வார்    ஆயிர   முகமா   நகர்   மஞ்ச"
(வி.பா.அருச்.தவநிலை. 159)    என்னுமிடத்து   வார் நீர் எனும்
பொருளில்   வந்தது.  பேரி - முரசு. ஆகுளி, முருடு - பழைய
போர்க்கால இசைக்கருவிகள். 
 

(12)
 

6872.

நஞ்சும் அஞ்சும் விழி நாகியர் நாண

 

வஞ்சி அஞ்சும் இடை மங்கையர், வானத்து

 

அம் சொல் இன் சுவை அரம்பையர், ஆடி,

 

பஞ்சமம் சிவணும் இன் இசை பாட,
 

நஞ்சும்   அஞ்சும்    விழி   -  விடமும் அஞ்சவல்ல 
விழிகளையுடைய; நாகியர்- நாக உலக மங்கையர்களும்; நாண-
வெட்கமுற்று;   வஞ்சி   அஞ்சும்   இடை  மங்கையர் 
வஞ்சிக்கொடியும் அஞ்சவல்ல இடையினையுடைய (வித்தியாதரப்)
பெண்டிரும்; இன்சுவை அஞ்சொல் வானத்து அரம்பையர்-
இனிய  சுவையோடு கூடிய  அழகிய   சொற்களை   மொழியும்
தேவமாதரும்; பஞ்சமம் சிவணும் இன்இசை - பஞ்சமப் பண்
போன்ற இனிய  இசையினை; ஆடிப் பாட - ஆடலோடு கூடப்
பாடி இசைக்கவும்...