பக்கம் எண் :

 இராவணன் வானரத் தானை காண் படலம் 523

நாகியர் - நாக  உலகத்துப்  பெண்கள். அரம்பையர் - வான்
உலகத்து மகளிர். மூவுலகத்து அழகியரும் இராவணன் கால்களைச்
சுற்றி   ஆடிப்பாடிக்   காலங்   கழிக்கின்றனர்   என்று  அவன்
ஆட்சியும்   மாட்சியும்  தெரிவித்தவாறு.   ஞ்சமம் - எழுவகைப்
பண்களில் ஒன்று. சிவணால்-ஒத்தல். 
 

(13)
 

6873.

நஞ்சு கக்கி எரி கண்ணினர், நாமக்

 

கஞ்சுகத்தர், கதை பற்றிய கையர்,

 

மஞ்சு உகக் குமுறு சொல்லினர், வல் வாய்க்

கிஞ்சுகத்த கிரி ஒத்தனர், சுற்ற,
 

நஞ்சு கக்கி எரிகண்ணினர் - விடம் உமிழ்ந்து, எரிகின்ற
கண்களையுடையவரும்; கதை பற்றிய கையர்-  கதாயுதத்தைப்
பற்றியுள்ள   கரங்களையுடையவரும்; மஞ்சு  உகக்   குமுறு
சொல்லினர்
- மேகமும் அஞ்சி வீழும்படியான குமுறி ஒலிக்கும்
சொற்களையுடையவரும்; கிஞ்சுகத்த வல்வாய்- முருக்க மலர்
போன்ற  பெரிய  சிவந்த  வாய்களையுடைய; கிரி ஒத்தனர் -
மலைகளை   ஒத்தவரும்  ஆகிய;   நாமக்   கஞ்சுகத்தர் -
அச்சந்தரும் சட்டையணிந்த மெய்க்காவலர்கள்; சுற்ற- சுற்றிக்
கொண்டே இருக்கவும்...
 

கஞ்சுகம் - சட்டை.,  கதை - தண்டு. கிஞ்சுகம்-முருக்கமலர்..
ஊன் உண்பவர் ஆகிய அரக்கருக்கு  குருதி தோய்ந்த வண்ணம்
உள்ள உதடுகள் உடைமை பற்றி, "வல்வாய்க் கிஞ்சுகத்த" என்றார்.
சிவந்த வாயையுடைய   மலைபோன்றவர் -இல் பொருள் உவமை.
நாமம்-அச்சம். 
 

(14)
 

6874.

கூய் உரைப்ப குல மால் வரையேனும்,

சாய் உரைப்ப அரியவாய தடந் தோள்- 

வாய் உரைத்த கலவைக் களி வாசம், 

 

வேய் உரைப்பது என, வந்து விளம்ப,
 

கூய் உரைப்ப- (யாவருக்கும்) தெரியுமாறு உவமை கூறுவதற்கு
உரிய; குலமால் வரையேனும் -  எட்டுத்திக்கிலும் உள்ள பெரிய
மலைகளாயினும்; சாய் உரைப்ப அரிய ஆய தடந்தோள்வாய்-
உவமை  கூறுவதற்கு   இயலாதனவான   அகன்ற   (இராவணன்)
தோள்களில்; உரைத்த கலவைக்களி வாசம் -பூசப்  பெற்றுள்ள
கலவைச்   சாந்துகளின்   நறுமணம்;  வேய் உரைப்பது என -
(இராவணன் வருகின்றான் என) ஒற்றர்கள்   வந்து  உரைப்பதைப்
போன்று; வந்து விளம்ப -காற்றில் கலந்து வந்து உரைக்கவும்...