ஆக - இவ்வாறாக; இராகவனை அவ்வழி கண்டான்- இராமபிரானை அப்போது கண்ட இராவணன்; மாக ராகம் நிறைவாள் ஒளியோனை- ஆகாயத்திலே சிவந்த நிறமுடைய பேர் ஒளியுடையவனான சூரியனை; ஏக ராசியினின் - அமாவாசையில்; எய்த எதிர்க்கும் - நெருங்கிச் சென்று எதிர்க்கின்ற; வேகராகு என- வேகம் மிக்க ராகு என்னும் கிரகத்தைப் போல; வெம்பி வெகுண்டான்- மனம் வெதும்பி சீறினான். |
மாகம்-ஆகாயம். ராகம்-சிவப்பு. ஏகராசி - அமாவாசை. சூரியனும் சந்திரனும் ஒன்றாய்க்கூடும் நாள். எதுகை நோக்கி நான்கடியிலும் "ரா" இகரம் பெறாமலேயே வந்தது. இராவணனை இராகு என்றும், இராமபிரானைக் கதிரவன் என்றும் உவமித்தார். இராகு, சூரியனை மறைக்க முயன்று தோல்வியைத் தழுவுவது போல் இராமனை எதிர்க்க முனையும் இராவணன் தோல்வியையே தழுவ உள்ளான் என்பதை உவமையால் பெற வைத்தார். |
(19) |
இராவணன் வினாவும், சாரன் விடையும் |
6879. | 'ஏனையோன் இவன் இராமன் எனத் தன் |
| மேனியே உரைசெய்கின்றது; வேறு இச் |
| சேனை வீரர் படையைத் தெரி' என்று |
| தான் வினாவ, 'எதிர், சாரன் விளம்பும்: |
|
ஏனையோன் இவன் - (மற்றவர்களிடமிருந்தும்) வேறுபட்டவனாகத் தோன்றுகிறவனான இவன்; இராமன் எனத்தன் மேனியே உரை செய்கின்றது- இராமன் என்று அவன் உடலின் தோற்றமே பேசுகின்றது; வேறு இச்சேனை வீரர்- (ஆகவே இவனைப் பற்றி உரைப்பதை விட்டு விட்டு) மற்ற படைவீரர்களினுடைய; படையைத் தெரி என்று - படைப் பெருமையைப் பற்றித் தெரிவிப்பாயாக என்று; தான் வினாவ- இராவணன் கேட்க; சாரன் விளம்பும் - சாரன் மறுமொழி கூறுவான். |
எம் பெருமான் திருமேனி, அன்பர் ஆவோர்க்கு உள்ளம் உருகவைக்கும்; கண்ணீர் பெருக வைக்கும்; அன்பர் அல்லார்க்கு சீற்றம் பெருக வைக்கும்; உதடு கடிக்கவைக்கும்; நெஞ்சம் எரிய வைக்கும்; பார்க்கக் கூச வைக்கும் என்பதனை மேற்பாடலாலும் இப்பாடலாலும் கவிஞர் பிரான் உணர வைத்தார். பெருமான் திருமேனி அன்பனான அநுமனையும் வீடணனையும் உருக வைத்தமை. "பெருமான் குண |