பக்கம் எண் :

 இராவணன் வானரத் தானை காண் படலம் 527

அழகாலே  அன்பரைக் கூட்டும்; மேனி அழகாலே பகைவரை
வாட்டும்" என்பதாம். 
 

(20)
 

6880.

'இங்கு இவன், "படை இலங்கையர் மன்னன் 

தங்கை" என்றலும், முதிர்ந்த சலத்தால், 

 

அங்கை வாள்கொடு அவள் ஆகம் விளங்கும்

கொங்கை, நாசி, செவி, கொய்து குறைத்தான். 
 

இங்கு   இவன் - (சாரன் இலக்குவனைச் சுட்டிக்காட்டி)
இதோ காணும் இவன்; "படை இலங்கையர் மன்னன் தங்கை"
என்றலும்
- 'படை   வலிமை  மிக்க   இலங்கையர் வேந்தன்
இராவணன் தங்கை என்று கேட்டவுடனே; முதிர்ந்த சலத்தால்
- முற்றிய   கோபத்தால்;   அங்கை  வாள் கொடு - அழகிய
கையில் வாளை ஏந்தி; அவள் ஆகம் விளங்கும் கொங்கை-
உன் தங்கை சூர்ப்பனகையின் மார்பில் விளங்கிய தனங்களையும்;
நாசி, செவி கொய்து குறைத்தான்
- மூக்குடன் காதுகளையும்
வெட்டி வீழ்த்திய இலக்குவன் ஆவான் (என்றான்).
 

சலம்-தணியாச் சினம், ஆறாக்கோபம். 
 

(21)
 

6881.

'அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி, 

நிறக் கருங் கடலுண் நேமியின் நின்று, 

துறக்கம் எய்தியவரும் துறவாத 

உறக்கம் என்பதனை ஓட முனிந்தான். 
 

அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி -  (இந்த
இலக்குவன்) தரும  நெறியை   நோக்குவதல்லாமல் வேறொரு
நெறியை நோக்காதவன்  ஆகி;  நிறக்   கருங்கடல் உண்-
நிறத்தால்   கருமையுடைய   கடலைத்   தன்னுள்  கொண்ட;
நேமியின்  நின்று
-  சக்கரவாள   மலைபோல்  அமைந்து;
துறக்கம்       எய்தியவரும்
     -      சொர்க்கத்தைச்
சென்றடைந்தவர்களும்; துறவாத  உறக்கம்  என்பதனை -
நீக்க      இயலாத     நித்திரை     என்று     சிறப்பித்துச்
சொல்லப்படுவதனை;   ஓட முனிந்தான்- வெருண்டோடுமாறு
சினந்தவன் ஆவான்.
 

கடலுக்குக்  காவலாக  அமைந்து  அதனைச் சூழ்ந்துள்ளது
சக்கரவாள மலை. அதுபோல், இராமனைக் காத்து அவனுக்குரிய
சூழலாக    அமைந்தவன்    இலக்குவன்.   அறக்கண்-அறமே
கண்ணாகக் கொள்ளல். கண் ஆகு பெயராக நெறியைக் குறித்தது.
இச்செய்யுளில்