பக்கம் எண் :

528யுத்த காண்டம் 

கம்பன் கழகப்  பாடம்  திருத்தப்பட்டது.  முன்னைய  பாடம்
'கடலுள் நேமி'  என்பதாகும். சக்கரவாளம் கடலைத்  தன்னுள்
கொண்டதே.  அன்றித்தான்  கடலுள்   இருப்பதன்று ஆதலின்
'கடல் உண் நேமி' என்று பாடம் கொண்டு பொருள் உரைத்தல்
சிறந்தது.   இச்சிறந்த     பாட  அமைப்பு டாக்டர். மா.ரா.போ.
குருசாமி அவர்கள் தந்ததாகும். 
 

(22)
 

6882.

'கை அவன் தொட அமைந்த கரத்தான், 

ஐய ! வாலியொடு இவ் அண்டம் நடுங்கச் 

செய்த வன் செருவினின் திகழ்கின்றான் 

 

வெய்யவன் புதல்வன்; யாரினும் வெய்யான்.
 

ஐய- ஐயனே! (இவன்) அவன் கைதொட - அந்த இராமன்
தன் கையினால்  பற்றி; அமைந்த கரத்தான்- (நட்பு கொள்ளும்
பெரும்  பேறு) பெற்ற  கைகளையுடையவன்;  வாலியொடு இவ்
அண்டம் நடுங்க
- வாலியோடு இந்த உலகம் நடுங்குமாறு; வன்
செருவினில்  திகழ்கின்றான்
  -  கொடிய போரிட்ட புகழாளன்;
வெய்யவன் புதல்வன் 
- சூரியன் புதல்வன் ஆகிய சுக்கிரீவன்;
யாரினும்  வல்லான்
- (இவன்) யாவரிலும் வலிமை வாய்ந்தவன்
ஆவான்.
 

இப்பாடல், சுக்கிரீவனைச் சாரன் சுட்டி உணர்த்தியது குறித்தது. 
 

(23)
 

6883.

'தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர்

அந்தரத்தர் அமுது ஆர்கலி காண, 

மந்தரத்தினொடும் வாசுகியோடும்,

 

சுந்தரப் பெரிய தோள்கள் திரித்தான். ?
 

மற்றையவன் தந்தை - (அந்தச் சுக்கிரீவனுக்கு அருகில்
இருக்கும்)    மற்றொருவன்  ஆகிய  அங்கதன் அவனுடைய
தந்தையாகிய   வாலி;   சார்வுஇல்  வலத்தோன்  - கூட்டு
ஒருவரையும் வேண்டாத  வலிமையையுடையவன்; அந்தரத்தர்
ஆர்கலி    அமுது  காண 
-  வான்   உலகத் தேவர்கள்
கடலிலிருந்து அமுது பெறுமாறு;  மந்தரத்தினொடும் வாசுகி
யோடும்
- மந்தர மலையோடும் வாசுகி  எனும்  பாம்போடும்
(சேர்த்து);   சுந்தரப்   பெரிய   தோள்கள்  திரித்தான்-
அழகுமிக்க  பெரிய   தோள்களால்   (கடலைக்) கடைந்தவன்
ஆவான்.