பக்கம் எண் :

 இராவணன் வானரத் தானை காண் படலம் 529

அங்கதனை, தந்தையின் பேராற்றலால் அறிமுகப்படுத்தியவாறு. 
 

(24)
 

6884.

'நடந்து நின்றவன், நகும் கதிர் முன்பு 

தொடர்ந்தவன்; உலகு, சுற்றும் எயிற்றின் 

இடந்து எழுந்தவனை ஒத்தவன்; வேலை 

கடந்தவன் சரிதை கண்டனை அன்றே? 
 

நடந்து  நின்றவன்- அங்கே நடந்து  கொண்டிருப்பவன்;
நகும் கதிர் முன்பு  தொடர்ந்தவன்
- ஒளிர்கின்ற சூரியனை
(கனியென்ற  கருதிப்) பின்   தொடர்ந்தவன்;  உலகு  சுற்றும்
எயிற்றின்
  -  உலகை   வளைந்த    பற்களால்;     இடந்து
எழுந்தவனை ஒத்தவன்
-  அகழ்ந்து எடுத்துக்கொண்டு வந்த
வராக  மூர்த்தியாகிய  திருமாலைப்    போன்றவன்;   வேலை
கடந்தவன்
- கடலைக் கடந்து (இலங்கைக்கு) வந்தவன் ஆகிய
அநுமன்; சரிதை கண்டனை- அவன் சரிதத்தை நீ கண்ணாரக்
கண்டறிந்துள்ளவன் அல்லவா?
 

மேல், (6882)  'இராமன்   கைகளால்    தொடுமாறு  நின்று
கொண்டிருப்பவன்'   என்று   சுக்கிரீவனைச்  சுட்டிக்  கூறினார்.
இங்கும்   நடந்து    கொண்டு   காவல் புரிந்த வண்ணம் உள்ள
அனுமன்    செயலைச்   சுட்டினார்.    நிகழ்வுகளை  அறிமுகம்
செய்யுந்திறத்தால் கதை மாந்தர்களை மனத்திரை  முன்  கொண்டு
வந்து நிறுத்தும் நாடகப் பாங்கு போற்றுதற்குரியது. பாத்திரங்களின்
நிலைகளுக்கேற்ப    வருணனையும்      பொருந்தி    வருகிறது.
திருமகளாகிய   சீதையை   மீட்க  அனுமன் செல்வது அன்றைய
திருமால் செயலுக்கு ஒப்பாதலால் 'இடந்தெழுந்தவனை ஒத்தவன்"
என்பது பொருந்தும் உவமையாதல் உணர்க.
 

(25)
 

6885.

'நீலன், நின்றவன்; நெருப்பின் மகன்; திண்

சூலமும் கயிறும் இன்மை துணிந்தும், 

ஆலம் உண்டவன் அடுந் திறல் மிக்கான்; 

"காலன்" என்பர், இவனைக் கருதாதார்.
 

நின்றவன்   நீலன்-  இதோ இங்கு நிற்கிற இவன் நீலன்;
நெருப்பின் மகன் -  தீக்கடவுளாகிய  அக்கினியின்  புத்திரன்;
திண் சூலமும் கயிறும்
- திண்ணிய சூலாயுதமும் பாசக் கயிறும்;
இன்மை  துணிந்தும்
-  இவன்   கைகளில்   இல்லாமையைத்
துணிவாக அறிந்திருந்தும்; இவனைக்  கருதாதார்  - இவனைப்
பற்றி    இவன்    பகைவர்கள்; அடும்திறல் மிக்கான் ஆலம்
உண்டவன்
- சங்காரம்  செய்வதில்   வல்லோனாகிய  நஞ்சுண்ட
கண்டனாய் விளங்கும்