சங்கார மூர்த்தியாகிய சிவபிரான் (என்றும்); காலன் என்பர்- இயமன் என்றும் கூறுவர். |
கயிறு-பாசக் கயிறு. பாசம் என்பதே கயிறாயினும் பாசக்கயிறு என்னும் வழக்கால் இயமனின் படையைக் குறித்தது. சூலம் இன்மை துணிந்தும் ஆலம் உண்டவன் என்றும், கயிறு இன்மை துணிந்தும் காலன் என்றும் இவனை இவன் பகைவர் கருதுவர் என்று நிரல் நிறையாகப் பொருள் கொள்க. இதனால் சூலமும் கயிறும் இன்றியே அவற்றிற்குரியார் புரியும் வீரம் விளைப்பவன் நீலன். என்பது கருத்து. |
(26) |
கலித்துறை |
6886. | 'வேறாக நின்றான், நளன் என்னும் விலங்கல் |
| அன்னான்; |
| ஏறா, வருணன் வழி தந்திலன் என்று இராமன் |
| சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செந் தீ |
| ஆறாதமுன்னம், அகன் வேலையை ஆறு செய்தான். |
|
வேறாக நிற்பான் - (அதோ அங்கு) தனித்து நிற்பவன்; நளன் என்னும் விலங்கல் அன்னான் - நளன் என்னும் பெயர் கொண்ட மலையைப் போன்றவன்; ஏறா வருணன் - (இராமன் வழிவேண்டும் என வேண்டியும்) செவியில் ஏற்காத வருணன்; வழி தந்திலன் என்று - கடலைக்கடக்க வழிதரவில்லை யென்று; இராமன் சீறாத உள்ளத்து எழுசீற்றம் - சினவாத மனமுடைய இராமன் மனத்தே எழுந்த சினம்; உகுத்த செந்தீ - வெளியிட்ட செந்தீ - ஆறாத முன்னம் - தணிவதற்குள்; அகன் வேலையை ஆறு செய்தான் - அகன்ற கடலை அணையாக்கி வழி செய்தவன். |
"குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது" (திருக்கு. 29) ஆதலின் சீறாத உள்ளத்து இராமன் சீற்றச் செந்தீ ஆறாத முன்னம் கடலுக்கு ஆறு செய்தான். என்று நளன் பெருமையும் இராமன் பெருமையும் ஒருங்கு கூறியவாறு. அகன்ற கடலை ஆறு செய்தான் என்பது ஒரு நயம். ஆறு - நதி, வழி சிலேடை, நளன் செயற்கரிய செய்தவன் என்பது தொனி. |
(27) |
6887. | 'முக் காலமும் மொய்ம் மதியால் முறையின் |
| உணர்வான், |
| புக்கு ஆலம் எழப் புணரிப் புலவோர் கலக்கும் |