பக்கம் எண் :

532யுத்த காண்டம் 

தேவர்களுடைய   மருத்துவர்களாகிய  அசுவினி   தேவர்களின்
குமாரர்கள்; வலிக்கண் மிக்கார்- வலிமையில்   மிகுந்தவர்கள்.
 

கருநிறமுடைய   நீலனின்   அருகில்    பொன்னிறமுடைய
அசுவினி     தேவரின்    மைந்தர்கள்    இருவரும்   நிற்பது
நீலமலைக்கருகே    இரண்டு      பொன்   மலைகள்  நிற்பது
போன்றிருந்தது என்பதாம். மேல், நீலனைக் குறிக்கையில் அவன்
வானரப்படையின்   சேனாதிபதி   என்னும்  செய்தி விடுபட்டுப்
போனமையால்  இப்பாட்டில்    செய்தியைச்  சொல்லி குறையை
நிறைவு  செய்தார்.  ஆடகம்-பொன்னினம்  நால்வகையுள் ஒன்று.
ஈடு-வலிமை.  மயிந்தன்,  துமிந்தன்   என்னும் வானர வீரர்களே
அசுவினி தேவகுமாரர்கள் அம்சமாய்ப் பிறந்தவர்கள் என்பர்.
 

(29)
 

6889.

'உவன்காண் குமுதன்; குமுதாக்கனும் ஊங்கு 

அவன்காண், 

இவன்காண் கவயன்; கவயாக்கனும் ஈங்கு 

இவன்காண்; 

சிவன்காண் அயன்காண் எனும் தூதனைப் பெற்ற 

செல்வன் 

அவன்காண், நெடுங் கேசரி என்பவன், ஆற்றல் 

மிக்கான். 

 

உவன்    காண்      குமுதன் -    அதோ    அந்த
நடுவிடத்திலேயிருப்பவன்  குமுதன்;   ஊங்கு  அவன் காண்
குமுதாக்கன்
- அதோ அவனருகில் நிற்பவன்தான் குமுதாக்கன்;
இவன்   காண்  கவயன்
- இதோ  இப்பக்கம் காண்கிறானே
இவன்தான்  கவயன்;  கவயாக்கனும்   ஈங்கு இவன்காண்-
கவயாக்கன் எனப்படுபவனும் இதோ  இங்கு  காணப்படுகிறான்;
காண்பாய்! சிவன்  காண்;  அயன் காண்- இவன் சிவனே;
இவன் பிரமனே; எனும் தூதனைப் பெற்ற செல்வன்- என்று
சொல்லப்படுகின்ற     அனுமனாகிய   தூதனைப் பெற்றுத்தந்த
(பெருஞ்)   செல்வனாகிய;    அவன்காண்    நெடுங்கேசரி-
அவன்தான் அந்த   நீண்ட புகழுக்குரிய கேசரி எனப்படுபவன்;
ஆற்றல் மிக்கான்
- பேராற்றல் படைத்தவன்.
 

குமுதாக்கன்  (குமுத + அக்கன்)     குமுதம்    போன்ற
கண்களையுடையவன். கவயாக்கன்-பசுவின்   கண்கள் போன்ற
கண்களையுடையவன். தம்  இதயம்   கவர்ந்த தொண்டனாகிய
அநுமனைத் தந்த   தந்தையாதலின், சிவன் காண்; அயன்காண்
எனும்    தூதனைப்  பெற்ற  செல்வன்; நெடுங்கேசரி என்றார்.
கேசரிக்கும் அஞ்சனைக்கும்  பிறந்தவன்   ஆஞ்சநேயனாகிய
அநுமன் என்க. அநுமன்