அமிசத்தால் சிவனும் அறிவால் பிரமனும் ஆதலின் "சிவன் காண்; அயன் காண்" எனப்பட்டான். ஒப்பு, "விரிஞ்சனோ விடை வலானோ" (3768) "காலனை ஒக்கும்தூதன் காலும் கண்ணுதலும் என்பார். " (6821); " புராரிமற்று யானே வாத சேயெனப் புகன்றான்" (206) "ஆதி அயன் தானேயென யாதும் அறைதின் நீர்!" (4725) என்று பல இடங்களில் இச்செய்தி குறித்தமை காண்க. |
(30) |
6890. | 'முரபன், நகு தோளவன், மூரி மடங்கல் என்னக் |
| கர பல் நகம் அன்னவை மின் உகக் |
| காந்துகின்றான்; |
| வர பல் நகம்தன்னையும் வேரொடு வேண்டின் |
| வாங்கும் |
| சரபன் அவன்; சதவலி ஆய தக்கோன். |
|
நகுகோளவன் - ஒளிர்கின்ற தோளினையுடையவனாய்; மூரி மடங்கல் என்ன- வலிய நரசிங்கம் என்று கூறும்படியாக; கரம், பல், நகம் அன்னவை- கைகளும், பற்களும், நகங்களும் ஆகியவை; மின் உகக் காந்துகின்றான் - மின்னல் போன்று ஒளி சிந்துமாறு விளங்குகின்ற அவன்தான்; முரபன்- முரபன் என்னும் பெயருடையவன்; வரபல் நகம் தன்னையும்- சிறந்த பல மலைகளையும்; வேண்டின் வேரொடு வாங்கும்- விரும்பினால் வேரொடு பெயர்க்கவல்ல ஆற்றலையுடைய; அவன் சரபன்- அவன்தான் சரபன் என்பவன்; இவன்- இதோ இங்கிருப்பவன்; சதவலி ஆய தக்கோன் - சதவலி எனும் பெயருடைய பெரியோன். |
மூரி-வலிமை-மடங்கல். திரிபு அணி. |
(31) |
6891. | 'மூன்று கண் இலன் ஆயினும், மூன்று எயில் |
| எரித்தோன் |
| போன்று நின்றவன் பனசன்; இப் போர்க்கு எலாம் |
| தானே |
| ஏன்று நின்றவன் இடபன்; மற்று இவன்தனக்கு |
| எதிரே |
| தோன்றுகின்றவன் சுடேணன், மூதறிவொடு |
| தொடர்ந்தோன். |
|
மூன்று கண் இலன் ஆயினும்- மூன்று கண்களையுடையவன் அல்லன் ஆயினும்; மூன்று எயில் எரித்தோன் - முப்புரம் எரித்த |