"மேதினியை முதுகு நொய்தெனச் செய்தவன்" என்று ததிமுகன் பெருமை சாற்றினார். |
(33) |
6893. | 'அண்ணல் ! கேள்: இதற்கு அவதியும் அளவும் |
| ஒன்று உளதோ? |
| விண்ணின் மீனினைக் குணிப்பினும், வேலையுள் |
| மீனை |
| எண்ணி நோக்கினும், இக் கடல் மணலினை |
| எல்லாம் |
| கண்ணி நோக்கினும், கணக்கு இலது' என்றனன், |
| காட்டி. |
அண்ணல்! - பெருமைக்குரியோனே! கேள்- கேட்பாயாக (என்று); காட்டி - (அவ்வானரச் சேனையினைக்) காண்பித்து; இவர்க்கு - இந்த வானர வீரர்கட்கு; உவமையும் அளவும்- ஒப்பும் எண்ணிக்கையும்; ஒன்று உளதோ?- ஏதேனும் உண்டோ? விண்ணின் மீனினைக் குணிப்பினும்- வானத்து மீன்களை எண்ணினாலும்; வேலையுள் மீனை எண்ணி நோக்கினும்- கடலில் உள்ள மீன்களை எண்ணிப் பார்த்தாலும்; இக்கடல் மணலினை எல்லாம் கண்ணி நோக்கினும்- இந்தக் கடலில் உள்ள மணலை எல்லாம் கருதிப் பார்த்தாலும்; கணக்கு இ(ல்)லை- கணக்கிட இயலாது என்றனன். |
சேனையினை எண்ண இயலாது என்பதற்கு வானத்து மீன்களையும், கடல் மீன்களையும் ஆழி மணலையும் எண்ண இயலாதது போல் என மூன்று உவமைகள் காட்டினார். |
(34) |
இராவணன் வானரப் படையை இகழ்தல் |
6894. | சினம் கொள் திண் திறல் அரக்கனும், சிறு நகை |
| செய்தான், |
| 'புனம் கொள் புன் தலைக் குரங்கினைப் புகழுதி |
| போலாம்; |
| வனங்களும் படர் வரைதொறும் திரிதரு மானின் |
| இனங்களும் பல என் செயும்; அரியினை?' |
| என்றான். |