பக்கம் எண் :

 மகுட பங்கப் படலம் 537

11. மகுட பங்கப் படலம்
 

இராவணன்     முதலியோர்     வானரப்      படைகளைக்
கண்ணுற்றபோது, இராமபிரான்    வீடணனுடன்   சுவேல  மலை
மீதிருந்து அவர்களைக்  காண்கின்றான்.   இவன்தான் இராவணன்
என வீடணன் சொல்லி   முடியும்  முன்,  இராவணனை நோக்கிச்
சுக்கிரீவன் பாய்ந்து   விடுகின்றான்.  இருவரும் கைகலக்கின்றனர்.
சுக்கிரீவனைக் காணாது இராமபிரான் சோகப்படுவதும். இராவணன்
முடிமணிகளைப்  பறித்துக் கொண்டு சுக்கிரீவன் மீண்டு வருவதும்,
இராமன்  மகிழ்ச்சியும்,    சுக்கிரீவன்    பணிவுரையும்  வீடணன்
பாராட்டுவதும்,   இராமன்  பாராட்டுவதும்  இப்படலச் செய்திகள்
ஆகும்.
 

வீடணனை, இராமன் அரக்கர்களை அறிவிக்கக் கேட்டல்
 

6895.

என்னும் வேலையின், இராவணற்கு இளவலை,  

இராமன்

 

'கன்னி மா மதில் நகர்நின்று நம் வலி காண்பான்

முன்னி, வானினும் மூடி நின்றார்களை, முறையால், 

இன்ன நாமத்தர், இனையர், என்று இயம்புதி'  

என்றான்.

 

என்னும் வேலையின் - (இராவணன் சாரனிடம்  இவ்வாறு)
கூறிக்    கொண்டிருந்தபோது;     இராமன்  -    இராமபிரான்;
இராவணற்கு    இளவலை
  -  இராவணனுக்குத்   தம்பியான
வீடணனை நோக்கி; நம்  வலி கண்பான்  முன்னி- நம் படை
வலிமையைக் காணக் கருதி; கன்னி  மாமதில்  நகர் நின்று -
அழியாத்   தன்மையுடைய    உயர்ந்த    மதில்கள்     சூழ்ந்த
இலங்கையிலிருந்து; வானினும் மூடி நின்றார்களை-ஆகாயத்தின்
கண்ணும் மறைத்து  நிற்பவர்களாகிய அரக்கர்களை; முறையால்-
முறைப்படி;     இன்ன      நாமத்தர்    -    இன்னின்ன
பேர்களையுடையவர்கள்; இனையர்-  இத்தகையவர்கள்;  என்று
இயம்புதி
- என்று கூறுவாயாக; என்றான்-
 

கன்னி மாமதில்-பகைவர் கை தொடாமதில். வேலை-வேளை.
 

(1)