பக்கம் எண் :

538யுத்த காண்டம் 

6896.

'நாறு தன் குலக் கிளை எலாம் நரகத்து நடுவான்

சேறு செய்து வைத்தான், உம்பர் திலோத்தமை  

முதலாக்

கூறும் மங்கையர் குழாத்திடைக் கோபுரக் குன்றத்து 

ஏறி நின்றவன், புன் தொழில் இராவணன்' என்றான். 
 

கோபுரக் குன்றத்து ஏறி - மலை போன்ற  கோபுரத்தின்
மேல் ஏறி; உம்பர் திலோத்தமை முதலாக் - தேவருலகத்துத்
திலோத்தமை    முதலாக;   கூறு  மங்கையர் குழாத்திடை-
புகழப்படுகின்ற  மகளிர்     கூட்டத்திடையே;    நின்றவன்-
நிற்பவன்தான்; தன் குலக் கிளை நாறு எலாம் -தன்னுடைய
குலத்தில் உதித்த சுற்றத்தார்  என்னும் நாற்றுக்களையெல்லாம்;
நரகத்து நடுவான்
- நரகத்தில் நடுவதற்காக;  சேறு செய்து
வைத்தான் 
-  நரகத்தை        சேற்றுழவு        செய்து
வைத்திருப்பவனான; புன் தொழில் இராவணன் - இழிசெயல்
புரிகின்ற இராவணன்; என்றான் - என்றான்.
 

கோபுரத்து     ஏறி   நிற்பவன் புன்தொழில்  இராவணன்
என்பதில் உள்ள எள்ளற் சுவையை நோக்குக. ஒரு வீரன் வீரர்
குழாம்  புடைசுழ  நிற்றல் இயல்பு. இவன் மகளிர் குழாம் புடை
சூழ நிற்கிறான்   என     அவன்    ஒழுக்கத்தின்   இழிவை
உணர்த்தினார்.     இதனால்,    புன்தொழில்      இராவணன்
எனப்பட்டான்.  நாற்றங்காலிலிருந்து நாற்றைப்  பிடுங்கி வயலில்
நடுவது வழக்காதலின்.  இலங்கை  நாற்றங்கால் ஆயிற்று; நரகம்
வயல் ஆயிற்றென்க.
  

(2)
 

சுக்கிரீவன் இராவணன் மேல் பாய்தல்
 

6897.

கருதி மற்றொன்று கழறுதல்முனம், விழிக் கனல்கள்

பொருது புக்கன முந்துற, சூரியன் புதல்வன்,- 

சுருதி அன்னவன், 'சிவந்த நல் கனி' என்று சொல்ல, 

பருதிமேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என,-  

பாய்ந்தான்.
 

கருதி மற்று ஒன்று கழறுதல் முனம்- (வீடணன் மேலும்)
மனத்தால்  வேறு எண்ணி, ஒன்று கூறுவதற்கு முன்பே; சூரியன்
புதல்வன்
- சுக்கிரீவன்;  விழிக்கனல்கள் பொருது முந்துறப்
புக்கன
- தனது கண்ணில்  சினத்தால்  எழுந்த    தீப்பொறிகள்
இராவணனைத் தாக்க முன்னால் புறப்பட்டவை போலப்