புறப்பட; சுருதியன்னவன் - வேதமே போன்றவனும்; சிவந்த நல்கனி என்று சொல்ல- உனக்கு உணவு சிவந்த நல்லகனிகள் என்றுதாய் சொல்ல; பருதிமேல் பண்டு பாய்ந்தவன் ஆம் - சூரியனைக் கனியென்று முன்பு சூரியன் மேல் பாய்ந்தவனும் ஆகிய; எனப் பாய்ந்தான் - அநுமனைப் போல் (இராவணனை நோக்கிப்) பாய்ந்தான். |
சுக்கிரீவன் உடலினும் மனம் முந்த மனத்திலும் மனத்துள் எழுந்த சினம் முந்த, சினத்திலும் அதனால் எழுந்த தீப்பொறிகள் முந்தி இராவணனைத் தாக்கச் சென்றன என்று கூறியுள்ள கற்பனைத் திறன் சுவைக்கத் தக்கது. |
(3) |
6898. | சுதையத்து ஓங்கிய சுவேலத்தின் உச்சியைத் துறந்து, |
| சிதையத் திண் திறல் இராவணக் குன்றிடைச் |
| சென்றான், |
| ததையச் செங் கரம் பரப்பிய தன் பெருந் தாதை |
| உதையக் குன்றின்நின்று உகு குன்றில் பாய்ந்தவன் |
| ஒத்தான். |
|
சுதையத்து ஓங்கிய - வானத்து மீன் மண்டலம் வரை உயர்ந்தோங்கியுள்ள; சுவேலத்தின் உச்சியைத் துறந்து- சுவேல மலையின் உச்சியை விட்டு; திண்திறல் சிதைய- பேர் ஆற்றல் எல்லாம் சிதையுமாறு; இராவணக் குன்றிடைச் சென்றான் - இராவணன் என்னும் மலைமேல் பாய்ந்த சுக்கிரீவன்; செங்கரம் ததையப்பரப்பிய - தன் செந்நிறக்கிரணங்களை, அடர்த்தியாகப் பரவச் செய்த; தன் பெருந்தாதை - தன்னுடைய பெருமைக்கு உரிய தந்தையாகிய சூரியன்; உதயக் குன்றின் நின்று- தான் உதிக்கும் உதயகிரி எனும் மலையிலிருந்து; உகுகுன்றில் பாய்ந்தவன் ஒத்தான் -தான் மறையும் அத்தமனகிரிக்குப் பாய்ந்தானைப் போன்றவன் ஆனான். |
ஒரு மலை மேலிருந்து இன்னொரு மலைமேல் குதித்தான் என்பது ஒரு நயம். |
(4) |
6899. | பள்ளம் போய்ப் புகும் புனல் எனப் படியிடைப் படிந்து |
| தள்ளும் பொற் கிரி சலிப்புறக் கோபுரம் சார்ந்தான், |