பக்கம் எண் :

540யுத்த காண்டம் 

வெள்ளம்போல் கண்ணி அழுதலும், இராவணன்மேல் 

தன்

உள்ளம்போல் செலும் கழுகினுக்கு அரசனும் 

ஒத்தான்.* 

 

பள்ளம்    போய்ப்   புகும் புனல் என- பள்ளமான
இடத்திற்குப் பாய்ந்தோடும்  நீரே போல; படியிடைப் படிந்து
தள்ளும்   பொற்கிரி  
-    பூமியிலே  சாயுமாறு சாய்த்துத்
தள்ளப்பட்ட  திரிகூட  மலையும்;    சலிப்புறக்   கோபுரம்
சார்ந்தான்
- சலிப்படையுமாறு இராவணனிருந்த கோபுரத்தைச்
சார்ந்தவனான   சுக்கிரீவன்;   வெள்ளம்   போற் கண்ணி
அழுதலும்
- வெள்ளம்   போலக்    கண்ணீர்   பெருக்கும்
கண்களையுடைய சீதை (விம்மி) அழுதவுடன்; உள்ளம் போல்
- தன் மனம் சென்ற வேகத்திலேயே;    இராவணன்  மேல்
செலும்
- இராவணன்   மேல்  பாய்ந்து சென்ற; கழுகினுக்கு
அரசனும் ஒத்தான்
- கழுகின்  வேந்தனாகிய  சடாயுவையும்
ஒத்தவன் ஆனான்.
 

சுக்கிரீவன்  இராவணன்   மேல்  பாய்ந்த  வேகத்திற்குப்
பள்ளம் பாயும் வெள்ளத்தை உவமையாக்கினார்.  மேருவுக்கும்
வாயுவுக்கும்   நிகழ்ந்த   பலப்   போட்டியில்  வந்து வீழ்ந்த
மேருவின் ஒரு துண்டாதலின் திரிகூடமலை "தள்ளும் பொற்கிரி"
எனப்பட்டது. 
 

(5)
 

6900.

கரிய கொண்டலை, கருணை அம் கடலினை,  

காணப்

பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர்,  

பிறரும்,

உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும், உலைவுற்று 

இரியல்போயின மயிற் பெருங் குலம் என இரிந்தார். 
 

கரிய     கொண்டலை  - கருமை நிறம் கொண்ட முகில்
போன்றவனும்; அம் கருணை கடலினை- அழகிய கருணையின்
கடல்   போன்றவனுமான   இராமபிரானை; காண- (கண்ணாரக்)
கண்டு மகிழ்வதற்காக;    பெரிய கண்கள் பெற்று   - பெரிய
அளவினையுடைய   கண்களைப் (பேறாகப்) பெற்று; உவக்கின்ற
அரம்பையர் பிறரும்
- மகிழ்வில் திளைக்கின்ற வானமாதர்களும்
பிற மாதர்களும்;  உரியகுன்றிடை - தமக்குரிய  மலையின் மீது;
உரும் இடி வீழ்தலும்
- அச்சம்  தரத்தக்க இடி  வீழ்ந்தவுடன்;
உலைவுற்று 
  -    மனம்   நடுங்கி;   இரியல்   போயின-
(திசைக்கொன்றாக)