அஞ்சி ஓடுகின்ற; மயில் குலம் ஆம் என- மயிற்கூட்டங்கள் என்னுமாறு; இரிந்தார்- அஞ்சி ஓடினர். |
இராமனின் பேரழகை மொண்டுண்ணப் பெருங்கண்கள் வேண்டும் என்று அப்பெண்கள் வரங்கேட்டுப் பெற்று வந்தவை என்பாராய். "பெரிய கண்கள் பெற்று" என்றார். இராம மேகம் கருணைக் கடலிலிருந்து இந்த அழகு வெள்ளத்தைப் பெற்று வந்துள்ளது என்பாராய், "கரிய கொண்டலை, கருணை அம் கடலை" எனச் சேர்த்துள்ள திறம் காண்க. உயிர்களைக் கவர்ந்து ஈர்க்கும் அழகு, உள்ளத்தில் கருணை எழுந்த போது எழும் எனும் ஓர் அரிய செய்தியும் இங்குப் புலனாகிறது. |
(6) |
இருவரும் கைகலத்தல் |
சந்தக் கலிவிருத்தம் |
6901. | கால இருள் சிந்து கதிரோன்-மதலை கண்ணுற்று, |
| ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி, |
| நீல மலை முன் கயிலை நின்றது என, நின்றான்; |
| ஆலவிடம் அன்று வர, நின்ற சிவன் அன்னான். |
|
கால இருள் சிந்து கதிரோன் மதலை - கரிய இருளை ஒழிக்கின்ற சூரியன் புதல்வனான சுக்கிரீவன்; அடல் இராவணனைக் கண்ணுற்று- ஆற்றல் மிக்க இராவணனைக் கண்டு; ஏல எதிர் சென்று எய்தி - நெருங்கி எதிரே சென்றடைந்து; அன்று ஆலவிடம் வர- (பாற்கடல் கடைந்த) அன்று, கடலில் ஆலகால விடம் தோன்ற; நின்ற சிவன் அன்னான் - (அஞ்சாது) எதிர் நின்ற சிவபெருமானைப் போன்றவனாய்; நீல மலை முன் கயிலை- நீலகிரியின் முன்னால் கயிலாயகிரி; நின்றது என நின்றான் - நிற்பது போல நின்றான். |
கரிய நிறம் கொண்ட இராவணனுக்கு நீல மலையும், வெள்ளை நிறங்கொண்ட சுக்கிரீவனுக்குக் கயிலைமலையும் உவமை. |
(7) |
6902. | 'இத் திசையின் வந்த பொருள் என்?' என, |
| இயம்பான், |
| தத்தி எதிர் சென்று, திசை வென்று உயர் தடந் |
| தோள் |
| பத்தினொடு பத்துடையவன் உடல் பதைப்ப, |
| குத்தினன் உரத்தில், நிமிர் கைத் துணை குளிப்ப. |