இத்திசையின் வந்த பொருள் - நான் உள்ள திசை நோக்கி வந்த காரியம்; என் என - என்ன என்று (இராவணன்) கேட்க; இயம்பான் - (வாயால்) விடையொன்றும் கூறாதவனாய்; தத்தி எதிர் சென்று- தாவி, (இராவணனுக்கு) நேராகப் போய்; திசைவென்று உயர் தடந்தோள்- எண் திசைகளையும் வென்று (பெருமிதத்தால்) உயர்ந்த அகன்ற தோள்கள்; பத்தினொடு பத்துடையவன் - இருபதை யுடையவனான இராவணனுடைய; உடல் பதைப்ப- உடல் நடுங்குமாறு; நிமிர் கைத்துணை குளிப்ப - உயர்த்திய தன் இருகைகளும் நன்கு பதியுமாறு; உரத்தில் குத்தினன் - மார்பில் குத்தினான் (சுக்கிரீவன்). |
(8) |
6903. | திருகிய சினத்தொடு செறுத்து எரி விழித்தான், |
| ஒருபது திசைக்கணும் ஒலித்த ஒலி ஒப்ப, |
| தரு வனம் எனப் புடை தழைத்து உயர் தடக் கை |
| இருபதும் எடுத்து, உரும் இடித்தென அடித்தான். |
|
திருகிய சினத்தொடு - (அப்போது இராவணன்) நேர்மையற்ற கோபத்தோடும்; செறுத்து எரிவிழித்தான்- பகை உணர்வோடும் தீப்பொறி சிந்தும் விழியோடு பார்த்தான்; தருவனம் என புடை தழைத்து - மரங்கள் அடர்ந்த காடுகள் போல பக்கமெல்லாம் தழைத்து விழித்து; உயர் தடக்கை- உயர்ந்து அகன்ற கைகள்; இருபதும் எடுத்து- இருபதையும் தூக்கி; உரும் இடித்தென ஒலித்த ஒலி ஒப்ப - இடி இடித்ததாக பத்துத்திசைகளிலும் எதிரொலித்த ஒலியினைப்போல; அடித்தான் - (பேரொலி எழ) சுக்கிரீவனைத் தாக்கினான். |
மரம் செழித்துக் கிடக்கும் வனம் போல, கரம் செழித்துக் கிடக்கும் உடல் ஆதலின், "தருவனம் எனப் புடை தழைத்து உயர் தடக்கை" என்றார். இதுமுதல் ஆறுகவிதைகள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ள அழகு காண்க. |
(9) |
6904. | அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம் |
| பொடித்து எழ, உறுக்கி எதிர் புக்கு, உடல் பொருந்தி, |
| கடுத்த விசையின் கடிது எழுந்து, கதிர் வேலான் |
| முடித் தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான். |
|
அடித்த விரல் பட்ட உடலத்து உழி - இராவணன் அடித்த விரல் பட்ட (சுக்கிரீவன்) உடம்பிலிருந்து; இரத்தம் பொடித்து எழ |