பக்கம் எண் :

562யுத்த காண்டம் 

"அம்புக்கு முன்னம் சென்று, உன் அரும் பகை

முடிப்பல்" என்று

வெம்புற்ற மனமும், யானும், தீது இன்றி, மீள

வந்தேன்.

 

செம்புக்கும்   சிவந்த -  செம்பு எனும் உலோகத்தைக்
காட்டிலும்;  செங்கண் திசை நிலைக்  களிற்றின் - சிவந்த
கண்களையுடைய திக்குயானைகளின்; சீற்றக் கொம்புக்கும் -
சினத்தோடு    பாய்ந்த    கொம்புகளுக்கும்;    என்னுடைய
புன்குரங்குத்தோள்
- என்னுடைய புல்லிய குரங்குத் தோள்கள்:
குறைந்த அன்றே
- வலி    குறைந்து போயின  அல்லவோ?
அம்புக்கு   முன்னம்   சென்று 
- (உன்னுடைய) அம்புக்கு
முன்னாகவே சென்று:  உன் அரும் பகை முடிப்பல் என்று-
உனது அரிய பகையை  முடிப்பேன்  என்று (கூறி); வெம்புற்ற
மனமும் யானும்
- புழுங்கிய உள்ளமும் நானுமாய்: தீங்கின்றி
மீள வந்தேன்
-  எந்த   வித   இடையூறு மின்றி பத்திரமாக
மீண்டு வந்து விட்டேன் (அல்லவோ?)
 

(41)
   

6936.

"நூல் வலி காட்டும் சிந்தை நும் பெருந் தூதன்,

வெம் போர

வேல் வலி காட்டுவார்க்கும், வில் வலி

காட்டுவார்க்கும்,

வால் வலி காட்டிப் போந்த வள நகர் புக்கு, மற்று

என்

கால் வலி காட்டிப் போந்தேன்; கை வலிக்கு அவதி

உண்டோ?

 

நூல்    வலி    காட்டும்   சிந்தை- (கற்ற) நூல்களின்
வலிமையைத்   (தன்  சொல்  வலிமையால்   காட்ட    வல்ல)
மனமுடைய: நும்  பெருந்தூதன் - உம்முடைய பெருமைக்குரிய
தூதுவனாகிய   அனுமன்:  வெம்போரில் - (தான் அரக்கருடன்
நடத்திய)   கொடிய  போரில்,  (தன்னிடம்)   வேல்     வலி
காட்டுவார்க்கும்  
-   தங்கள்  வேலின் வலிமையைக் காட்ட
வந்தவர்க்கும்:  வில்   வலி   காட்டுவார்க்கும் -  வில்லின்
வலிமையைக் காட்ட  வந்தவர்க்கும்:   வால்   வலி காட்டிப்
போந்த வள நகர்
-  (மாறாகத் தன்)   வாலின்  வலிமையைக்
காட்டித் திரும்பிய  வளம் மிக்க நகராகிய இலங்கையில் புகுந்து:
என் கால் வலி  காட்டிப்  போந்தேன்
- (திரும்பி வருவதில்)
என்னுடைய கால்