வலிமையைக் காண்பித்து வந்தேன்: கை வலிக்கு அவதி உண்டோ?- என் கை வலிமைக்கு எல்லையும் உளதோ? |
(42) |
வீடணன் சுக்கிரீவனது வீரத்தைப் பாராட்டுதல் |
6937. | இன்னன பலவும் பன்னி, இறைஞ்சிய முடியன் |
| நாணி, |
| மன்னவர்மன்னன் முன்னர், வானர மன்னன் நிற்ப, |
| அன்னவன்தன்னை நோக்கி, அழகனை நோக்கி, |
| ஆழி |
| மின் என விளங்கும் பைம் பூண் வீடணன் |
| விளம்பலுற்றான்: |
|
இன்னன பலவும் பன்னி- இவ்வாறு பல வாசகங்களைச் சொல்லி;இறைஞ்சிய முடியன் நாணி- வணங்கிய தலையினனாய் வெட்கமுற்று; மன்னவர் மன்னன் முன்னர் - அரசர்க்கு அரசனான இராமபிரான் முன்பு: வானர மன்னன் நிற்ப- வானரங்கட்கு அரசனான சுக்கிரீவன் நிற்கும்போது: அன்னவன் தன்னை நோக்கி- அந்தச் சுக்கிரீவனைப் பார்த்து: அழகனை நோக்கி- இராமபிரானைப் பார்த்து: ஆழி மின் என விளங்கும் பைம்பூண் - கடலில் தோன்றிடும் மின்னலைப் போல் ஒளிவிடும் ஆபரணங்களையணிந்த: வீடணன் மொழிவது ஆனான் - வீடணன் மொழியத் தொடங்கினான். |
இட்சுவாகு குலத்திற்கு உலக அரசுகள் எல்லாம் கட்டுப்பட்டது என்னும் மரபு பற்றி "மன்னவர் மன்னன்" என இராமபிரானைச் சுட்டினார். |
(43) |
6938. | 'வாங்கிய மணிகள், அன்னான் தலைமிசை மௌலி |
| மேலே |
| ஓங்கிய அல்லவோ? மற்று, இனி அப்பால் உயர்ந்தது |
| உண்டோ? |
| தீங்கினன் சிரத்தின் மேலும், உயிரினும், சீரிது |
| அம்மா! |
| வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கி |
| விட்டாய்! |