வாங்கிய மணிகள் - (வீடணன் சுக்கிரீவனைப் பார்த்து) (நீ) பறித்து வந்த மணிகள்: அன்னான் - அந்த இராவணனுடைய: தலைமிசை மௌலி மேலே - தலையின் மேல் உள்ள மகுடத்தின் மேலே: ஓங்கிய அல்லவோ? - (ஒளிவீசி) உயர்ந்திருந்தன அல்லவோ?இனி அப்பால் உயர்ந்தது ஒன்று உண்டோ? - அவன் தலைமுடி மேல் உயர்ந்திருப்பதிலும் உயர்ந்தது இருக்கிறதா?: தீங்கினன் சிரத்தின் மேலும்- தீமைகள் நிறைந்த அவன் தலைகளை விடவும்: உயிரினும் - உயிரினை விடவும்: சீரிது- சிறப்புடையனவாக கருதியவை அவை: வீங்கிய புகழையெல்லாம்- (அவற்றைப் பறித்து வந்ததன் மூலமாக) அவனுடைய உயர்ந்தோங்கிய புகழ் அனைத்தையும்: வேரொடும் வாங்கி விட்டாய் - வேரொடும் பறித்து வந்து விட்டாய் (அல்லவோ?) |
'அல்லவோ' என்பது ஈரிடத்தும் கூட்டப்பட்டது. இராவணன் உடம்பில் சிறந்தது தலை, அதில் சிறந்தது மகுடம். அதில் சிறந்தது மணி. அதனைப் பறித்து வந்தவன் நீ, சிறந்ததிற் சிறந்ததைப் பறித்து வந்த நீ, சிறந்ததில் சிறந்த செயல் செய்துள்ளனை என்கின்றான் வீடணன். மகுட மணியைப் பறித்தது புகழை வேரொடு பறித்த செயலாகும் எனப் பாராட்டிய திறம் காண்க. |
(44) |
6939. | 'பாரகம் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க |
| வேண்டின், |
| வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா, |
| தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் |
| தந்த |
| வீரதை விடைவலோற்கும் முடியுமோ? வேறும் |
| உண்டோ? |
|
பாரகம் சுமந்த பாம்பின் - இப்பூமியைச் சுமந்துள்ள பாம்பாகிய ஆதிசேடனுடைய: பணா மணி பறிக்க வேண்டின் படத்தில் உள்ள நாகமாணிக்கங்களைக் கைப்பற்ற விரும்பினால்: வார்கழல் காலினாலே - (தனது) வீரக்கழல் அணிந்த காலினாலேயே: கல்ல வல்லவனை - கல்லி எடுக்கவல்ல (பேராற்றல் மிக்க) இராவணனுடைய: முன்னா - முன்னாக நின்று: தார் கெழு மௌலி பத்தின் - மாலைகள் நிறைந்த மகுடங்கள் பத்திலிருந்த: தனி மணி வாங்கி வந்த வீரதை - ஒப்பற்ற மணிகளைப் பறித்து வந்த வீரத்தை:விடை வலோற்கும்- இடப வாகனம் ஏறும் சிவபெருமானாலும்:முடியுமோ?- புரிய |