பக்கம் எண் :

 மகுட பங்கப் படலம் 565

இயலுமோ?    வேறும்   உண்டோ?- (இதைவிடவும் சிறந்த
வீரச்செயல்) வேறு எதுவும் உண்டோ? (இல்லை)
 

"யாதன்    உருபின்    கூறிற்று  ஆயினும் பொருள் செல்
மருங்கின் வேற்றுமை சாரும்" (தொல், சொல், வேற், மயங். 23)
ஆதலின்,    கல்லவல்லவனை   விடை  வலோற்கும்" எனும்
இடங்களில்  உள்ள    இரண்டன்  உருபும், நான்கன் உருபும்
பொருட்சிறப்புக்கேற்ப,   ஆறன்   உருபாகவும்      மூன்றன்
உருபாகவும் உருபுமயக்கப் பொருள்கொள்ளப் பெற்றன.
 

(45)
 

6940.

'கரு மணி கண்டத்தான்தன் சென்னியில் கறை

வெண் திங்கள்,

பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி,

பறித்திட்டாலும்,-

தரு மணி இமைக்கும் தோளாய்!--தசமுகன்

முடியில் தைத்த

திரு மணி பறித்துத் தந்த வென்றியே சீரிது

அன்றோ?

 

தருமணி இமைக்கும் தோளாய் - புனைந்துள்ள மணிகள்
ஒளிர்கின்ற  தோள்களையுடையவனே! கருமணி கண்டத்தான்
தன்
- நீலமணி    போன்ற    கழுத்தினனான சிவபிரானுடைய:
சென்னியில்
-   திருமுடியில் (உள்ள)   கறைவெண் திங்கள்-
களங்கமுள்ள  வெள்ளிய  சந்திரனையும்:  பருமணி வண்ணன்
மார்பின் செம்மணி
  -  பெரிய நீல மணி போன்ற நிறமுடைய
திருமாலின்    மார்பில்    உள்ள   கவுத்துவ     மணியையும்:
பறித்திட்டாலும் 
- கைப்பற்றிக்    கொணர்வது  இயன்றாலும்
(அவற்றையெல்லாம் விட): தசமுகன் முடியில் தைத்த- பத்துத்
தலையினனான    இராவணன் முடியில்  பதித்திருந்த: திருமணி
பறித்துத் தந்த
  - சிறந்த   மணியைப்   பறித்துக் கொணர்ந்த:
வென்றியே    சீரிது  அன்றோ?
- வெற்றியே சிறப்புடையது
அல்லவோ?
 

(46)
 

6941.

'தொடி மணி இமைக்கும் தோளாய்;--சொல் இனி

வேறும் உண்டோ?

வடி மணி வயிர ஒள் வாள் சிவன்வயின் வாங்கிக்

கொண்டான்