பக்கம் எண் :

566யுத்த காண்டம் 

முடி மணி பறித்திட்டாயோ? இவன் இனி முடிக்கும் 

வென்றிக்கு

அடி மணி இட்டாய் அன்றே?--அரிக் குலத்து

 அரச!' என்றான்.

 

அரிக்குலத்து   அரச! -  குரங்கினத்தின்   தலைவனே!
தொடிமணி   இமைக்கும்  தோளாய்! 
-  தோள்வளையில்
பதித்துள்ள   மணிகள்   ஒளிரும்    தோள்களையுடையவனே!
வடிமணி வயிரத்து ஒள்வாள்
-தேர்ந்த மணிகளும் வயிரமும்
பதிக்கப்   பெற்ற 'சந்திரகாசம்'  என்னும்   வாளினை:  சிவன்
வயின் வாங்கிக் கொண்டான்
- சிவபிரானிடமிருந்து பெற்றுக்
கொண்டவனான இராவணனுடைய: முடிமணி பறித்திட்டாயோ?
- மகுடத்தில் இருந்த மணிகளையா கைப்பற்றினாய் நீ?: இவன்-
(இல்லை.  இல்லை)  இந்த   இராமபிரான்:   இனி   முடிக்கும்
வெற்றிக்கு
- இனி அடைய இருக்கும் வெற்றி மாளிகைக்கு; அடி
மணி இட்டாய
`் - அடித்தளத்தில்   இடும்   மணியை யன்றோ
இட்டாய்!    சொல்   இதின்   வேறும்  உண்டோ?- புகழ்
விளைக்கும்  செயல் இதை  விடவும் வேறு எதுவும் உண்டோ?
(இல்லையென்க); என்றான்-
 

சிவனிடம்     இராவணன்    வரத்தால்    பெற்ற  வாள்
"சந்திரகாசம்"    முடிமணியைப்   பறித்திட  வில்லை' இராமன்
வெற்றி    மாளிகைக்கு அடித்தள மணியிட்டாய் என ஒன்றைச்
சமத்காரமாக   மறுத்து   இன்னொன்றாகக்   கூறுவதால் இது
அவநுதியணி.
  

(47)
 

இராமன், சுக்கிரீவன் வெற்றியைப் போற்றுதல்
 

6942.

'வென்றி அன்று என்றும், வென்றி வீரர்க்கு

விளம்பத்தக்க

நன்றி அன்று என்றும், அன்று; நானிலம் எயிற்றில்

கொண்ட

பன்றி அன்றுஆகின், ஈது ஆர் இயற்றுவார்

 பரிவின்?' என்னா,

'இன்றுஇது வென்றி' என்று என்று, இராமனும்  

இரங்கிச் சொன்னான்.

 

வென்றி  அன்று என்றும் - (வீடணன் புகழுரைகளைக்
கேட்டு மகிழ்ந்த இராமன் சுக்கிரீவனை நோக்கி) (உன்னுடைய
இச்செயல்)   வெற்றியுடையது   அன்று   என்றும்: வென்றி
வீரர்க்கு விளம்பத்தக்க