பக்கம் எண் :

 மகுட பங்கப் படலம் 567

- வெற்றி   வீரர்    பால்  அமையத்தக்க  புகழத்தக்க: நன்றி
அன்று    என்றும்    அன்று   
-    நன்றியுணர்வினைக்
காட்டுவதற்குரியது  அன்று   என்றும்   நான்   கருதவில்லை:
நானிலம் எயிற்றில்  கொண்ட
-  பூமியைத் தன் தந்தத்தின்
நுனியில் ஏந்தி  வந்த: பன்றி  அன்று    ஆகின்  - வராக
மூர்த்தியாகிய   திருமாலைத்   தவிர:   பரிவின்   ஈது ஆர்
இயற்றுவார்?
-இச்செயலை இவ்வளவு விரைவில் யாரே இயற்ற
இயலும்:என்னா-  என்று;  என்று என்று- மீண்டும் மீண்டும்:
இரங்கிச்   சொன்னான்
-  (சுக்கிரீவனை முன்பு வைத்தற்கு)
இரங்கிக் கூறினான்.
   

சுக்கிரீவன்    தன்  இசைவு பெறாமல், ஆர்வ மிகுதியால்
சினங்காவாது பகைவன்  பிடியில்  அகப்பட இருந்த ஆத்திரச்
செய்கை     பெருமானை      வருத்தியதால்       முன்னர்
கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினாலும் மணி முடியைப் பறித்த
வெற்றியைப் பெரிதும் பாராட்டினான் என்றும் கொள்க...
  

(48)
 

கதிரவன் மறைவு
 

6943.

தன் தனிப் புதல்வன் வென்றித் தசமுகன் முடியில்

தைத்த

மின் தளிர்த்தனைய பல் மா மணியினை வெளியில்

கண்டான்;

'ஒன்றுஒழித்துஒன்றுஆம்' என்று, அவ் அரக்கனுக்கு 

ஒளிப்பான்போல,

வன் தனிக் குன்றுக்கு அப்பால், இரவியும் மறையப்

போனான்.

 

இரவியும்  -  சூரியனும்;   தன்  தனிப்  புதல்வன் -
தன்னுடைய ஒப்பற்ற மகன்; வென்றித் தசமுகன்-  வெற்றி
பொருந்திய  இராவணனுடைய; முடியில் தைத்த- மகுடத்தில்
பதித்திருந்த: மின் தளிர்த்து அனைய பல்மா மணியினை-
மின்னல்      போன்று      (தன் ஒளிக்கதிர்கள் படுதலால்)
ஒளிசிந்துகின்ற   பலபெருமைக்குரிய  மணிகளை; வெளியில்
கண்டான்
- உலகிலே  கண்டான்:  'ஒன்று ஒழித்து ஒன்று
ஆம்'
- 'ஒன்று கிடக்க   ஒன்று ஆகிவிடக்கூடும்' என்று:அவ்
அரக்கனுக்கு
  - அந்த   அரக்கனாகிய    இராவணனுக்கு:
ஒளிப்பான் போல
- அஞ்சி ஒளிந்து கொள்பவனைப் போல:
வன்தனிக் குன்றுக்கு அப்பால்
-  வலிய அத்தகிரி எனும்
தனக்குரிய