பக்கம் எண் :

 மகுட பங்கப் படலம் 569

     

அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் 

ஆக

பொன்றாது பொன்றினான், தன் புகழ் என இழிந்து,

போனான்.

  
என்றானும் - எந்த நாளிலேயும்:இனைய தன்மை - இத்தகைய
இழிந்த   நிலையை:    எய்தாத    இலங்கை    வேந்தன்-
அடைந்தறியாத   இராவணன்:நின்றார்கள் தேவர் கண்டார்-
சுக்கிரீவனால்  தான்  அடைந்த இழிநிலையை வானத்தில் நின்று
தேவர்கள்   கண்டார்களே!:    என்பது   ஓர்  நாணம் நீள-
என்பதனால் எழுந்த தனித்த    வெட்கம்    ஓங்க:    அன்று-
அப்பொழுது:     ஆய    மகளிர்  நோக்கம் - சுற்றியிருந்த
அரண்மனை   மகளிர்  கூட்டத்தின்  காதல் பார்வையெல்லாம்:
ஆடவர்    நோக்கம்    ஆக
-  (காதற்குறிப்பற்ற வெறும்)
ஆடவர்கள் பார்வையாகி போக, (மானக்கேட்டால்): பொன்றாது
பொன்றினான்
- சாவாமல் செத்துக் கொண்டிருந்த இராவணன்:
தன் புகழ்  என
- தன் புகழ்   இறங்குவது  போல: இழிந்து
போனான்
  -    (கோட்டைக்)  கோபுரத்திலிருந்து   இறங்கிப்
போனான்.
 

(51)