"ஊன்றப்பட்ட" என்னும் வினையால், ஊன்றப்பட்டது மானம் என்னும் வேல் என்பது குறித்தார். அது பாய்ந்துள்ள இடம் நெஞ்சில் என்பார். "மருமத்தான்" என்றார். இந்தப்பாடலில் உள்ள அவலச் சுவை இராவணன் பெற்ற இளிவும் இழவும் பற்றி வந்தது. |
(1) |
6947. | வை எயிற்றாலும், நேரா மணி இழந்து இரங்கலாலும், |
| பையுயிர்த்து அயரும் பேழ் வாய்ப் பல் தலைப் |
| பரப்பினாலும், |
| மெய்யனை, திரையின் வேலை மென் மலர்ப் பள்ளி |
| ஆன |
| ஐயனை, பிரிந்து வைகும் அனந்தனே--அரக்கர் |
| வேந்தன். |
|
அரக்கர் வேந்தன் - அரக்கர் கோமானாகிய இராவணன்; வை எயிற்றாலும் - கூரிய பற்கள் கொண்டுள்ளமையாலும்; நேரா மணியிழந்து இரங்கலாலும் - ஒப்பற்ற மணிகளை இழந்து மனம் இரங்குவதாலும்; பை உயிர்த்து அயரும் - படங்களுடன் கூடிப் பெருமூச்சு விட்டுத் தளரும்; பேழ்வாய்ப் பல்தலைப் பரப்பினாலும் - பிளந்த வாயை உடைய பல தலைகளின் பரப்பினையுடைமையாலும்;மெய்யனை - உண்மைப் பொருளாய் உறைபவனும்; ஐயனை - உயிர்க்கூட்டத்தின் தலைவனும் ஆகிய திருமாலை; பிரிந்து வைகும் - பிரிந்து வாழ்பவனும்; திரையில் மென்மலர் பள்ளி ஆன- அலை சூழும் பாற்கடலில் அமைந்துள்ள மெல்லிய மலர்ப் படுக்கையானவனும் ஆன; அனந்தனே - ஆதிசேடனே போன்றவன் ஆனான். |
அரக்கர் வேந்தன், வையெயிற்றாலும், மணியிழந்து இரங்கலாலும், பல்தலைப் பரப்பினாலும் அநந்தனே என இயைத்துப் பொருள் கொள்க. மானம் இழந்து மனத்துயர்மிக்கு பெருமூச்சோடு படுத்துக்கிடக்கும் இராவணனுக்குப் பாற்கடலில் திருமாலைப் பிரிந்து வாடும் ஆதிசேடன் உவமையானான். ஏது உவமையணி. "பிரம்ம ஸத் ஜகத் மித்யை" என்பது உபநிடதமாதலின், என்றும் உள்ள இறைவனை "மெய்யன்" என்றார். |
(2) |
6948. | தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் |
| ஆகா |
| மாய வல் உருவத்தான் முன் வருதலும், வாயில |
| காப்பான், |