பக்கம் எண் :

 அணி வகுப்பு படலம் 573

வணங்கிய,    அறிஞன்   தன்னை-  அறிவு  சான்ற (அந்த)
ஒற்றனாகிய  சார்த்தூலனை   (நோக்கி);  'பிழை அற அறிந்த
எல்லாம் உரைத்தி'
- 'நீ பிழையின்றி ஒற்றறிந்தவற்றையெல்லாம்
(இப்போது) உரைப்பாயாக'; என்று அரக்கன்  பேச - என்று
இராவணன் உரைக்க;முழை உறுசீயம்  அன்னான் - குகையில்
அடைந்துள்ள சிங்கம்  போன்ற இராவணனுடைய;முகத்தினால்
அகத்தை நோக்கி 
-  முகக்குறிப்பினால்   (அவன்)   மனம்
நொந்திருப்பதை யுணர்ந்து; குழையுறு    நெஞ்சன் - பணிந்த
உள்ளம்  உடையவனாய்;பைய  வரன்முறை கூறலுற்றான்  -
மெல்ல, தான் தெரிந்து வந்த  முறைப்படி கூறத் தொடங்கினான்
(சார்த்தூலன்).
 

(4)
 

6950.

'வீரிய! விதியின் எய்தி, பதினெழு வெள்ளத்தோடும்,

மாருதி, மேலை வாயில் உழிஞைமேல் வருவதானான்; 

ஆரியன், அமைந்த வெள்ளம் அத்தனையோடும், 

வெற்றிச்

 

சூரியன் மகனைத் தன்னைப் பிரியலன் நிற்கச்

சொன்னான்.

  

வீரிய- வீரம் செறிந்தவனே! மாருதி - அனுமன்; பதின்
எழுவெள்ளத்தோடும்
- பதினேழு வெள்ளம்  சேனையோடும்;
மேலை  வாயில் 
- (கோட்டையின்) மேற்குவாசலில்; உழிஞை
மேல்     வருவது      ஆனான்
-   மதிலைச்   சூழ்ந்து
முற்றுகையிட்டுள்ளான்; ஆரியன்- இராமபிரான்;சூரியன் மகனை
- சூரியன் மகனாகிய சுக்கிரீவனை;    அமைந்த    வெள்ளம்
அத்தனையோடும்
- மேற்கூறியவாறு அதே பதினேழு வெள்ளம்
சேனையோடும்;தன்னைப்  பிரியலன்  நிற்கச் சொன்னான்-
தன்னை விட்டு நீங்காமல்   (தன்னுடனேயே கூட)    நிற்குமாறு
பணித்துள்ளான்.
 

இப்பாடல்   முதலாக  வானர சேனையின் அணிவகுப்பு கூறப்
பெறுகிறது. மதிலை வளைத்து முற்றுகையிடுதலை உழிஞைத் திணை
ஆதலின்,    "உழிஞை     மேல்    வருவது  ஆனான்" என்றார்.
கொடியோனாகிய   இராவணனால், அவன் முடி மணி பறித்து வந்த
சுக்கிரீவனுக்கு, ஏதாயினும் இடர் வரக்கூடும்   என்று, இராமபிரான்
தன்னருகேயே      வைத்துக்    கொண்டு  பதினேழு  வெள்ளம்
சேனையையும்   அவனைச்    சுற்றி  நிற்கப் பணித்தான். இதனால்
தன்னை  அடைந்தாரைக்  காக்கும்   அண்ணலின்   பேருள்ளமும்
பேரருளும் புலனாகின்றன.
 

(5)