6951. | 'அன்றியும், பதினேழ் வெள்ளத்து அரியொடும் |
| அரசன் மைந்தன்; |
| தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் |
| செய்வதானான்; |
| ஒன்று பத்து ஆறு வெள்ளத்து அரியொடும் |
| துணைவரோடும் |
| நின்றனன், நீலன் என்பான், குண திசை வாயில் |
| நெற்றி. |
|
அன்றியும் - அல்லாமலும்; அரசன் மைந்தன் - கிட்கிந்தைக்கு இளவரசனாகிய அங்கதன்; பதினேழ் வெள்ளத்து அரியொடும் - பதினேழு வெள்ளம் வானரப்படைகளுடனே; தென்திசை வாயில் - இலங்கையின் தெற்குத்திசை வாயிலில்; செய்யும் செரு எலாம் செய்வது ஆனான் - செய்ய வேண்டிய போரையெல்லாம் செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளான்; ஒன்று பத்து ஆறு வெள்ளத்து - (மேலும்) பதினேழு வெள்ளம்;அரியொடும் துணைவரோடும்- குரங்குகளோடும் துணையான நண்பர்களோடும்; நீலன் என்பான்- நீலன் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறவன்; குண திசை வாயில் நெற்றி நின்றனன் - கிழக்குத் திசை வாயிலின் முன்பு நின்றுள்ளான். |
ஒன்று பத்து ஆறு-கூட்டுத் தொகையாய்ப் பதினேழைக் குறித்து நின்றது. படைகள் வந்து தண்டு இறங்கியுள்ள இடம் வடக்குக் கோட்டை வாயில் ஆதலின், அதனைத் திசை குறியாமல் கூறியுள்ள திறம் காண்க. |
(6) |
6952. | 'இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு, |
| இரண்டு வெள்ளம் |
| வெம்பு வெஞ் சேனைக்கு எல்லாம் உணவு தந்து |
| உழலவிட்டான்; |
| உம்பியை, வாயில்தோறும் நிலை தெரிந்து உணரச் |
| சொன்னான்; |
| தம்பியும் தானும் நிற்பதாயினான்; சமைவு ஈது' |
| என்றான். |
|
இரண்டு வெள்ளம்- இரண்டு வெள்ளம் சேனையை; இம்பரின் - இவ்வுலகிலே; இயைந்த காயும் கனியும் கொண்டு - |