உண்ணத்தக்க காய் கனிகளைக் கொண்டு வந்து;வெம்பு வெஞ்சேனைக்கு எல்லாம் - சினந்து போரிடும் கொடிய சேனைகட்கு எல்லாம்; உணவு தந்து உலவவிட்டான்- உணவு அளிக்குமாறு திரிய விட்டிருக்கிறான்; (இராமன்) உம்பியை- உன்னுடைய தம்பியாகிய வீடணனை; வாயில் தோறும் - நான்கு வாயில்களிலும்;நிலை தெரிந்து உணரச் சொன்னான் - (அவ்வப்போதுள்ள) நிலவரங்களை அறிந்து தன்னிடம் அறிவிக்கக் கூறியுள்ளான்; தானும் தம்பியும் - தானும் தன் தம்பியாகிய இலக்குவனும் ஆக;நிற்பது ஆயினன் - (வடக்கு வாயிலில்) நிற்பது ஆனான்; சமைவு ஈது என்றான்- (எதிரியின் அணியில் நிகழ்ந்துள்ள) ஏற்பாடுகள் இது என்று முடித்தான் (சார்த்தூலன்). |
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்" (திருக். 517) என்பதற்கேற்ப உரியவர்களுக்கு உரிய பணிகள் தரப்பட்டன. வெள்ளம்-ஆகு பெயராய்ச் சேனையைக் குறித்தது. "இயைந்த எல்லாம்" என்பதற்கு "கிடைத்தவையெல்லாம்" எனினும் பொருந்தும். இன்றுள்ள படை அமைப்பிலும் இம்முறைகள் உள்ளமை அறிக. |
(7) |
இராவணன், அமைச்சரோடு ஆராய்தல் |
6953. | சார்த்தூலன் இதனைச் சொல்ல, தழல் சொரி |
| தறுகணானும், |
| பார்த்து, ஊழி வடவை பொங்க, 'படுவது படுமா |
| பார்த்தி; |
| போர்த் தூளி துடைப்பென் நாளை, அவர் |
| உடற்பொறையின்நின்றும் |
| தேர்த்து ஊறு குருதிதன்னால்' என்றனன், எயிறு |
| தின்னா. |
|
சார்த்தூலன் இதனைச் சொல்ல- சார்த்தூலன் இவ்வாறு கூறி முடித்தவுடன்; தழல் சொரி தறு கணானும்- தீப்பொறி சிதறும் கண்கள் கொண்ட இராவணனும்; பார்த்து- (கனல் சொரி கண்ணினனாய்) பார்த்து; எயிறு தின்னா- பற்களைக் கடித்த வண்ணம்;அவர் - அப்பகைவரின்;உடல் பொறையின் நின்றும் - உடல் சுமையிலிருந்தும்;தேர்த்து ஊறு குருதி தன்னால்- தேர் சென்ற சுவடு வழியாய் ஓடும் குருதி வெள்ளத்தால்; போர்த்தூளி நாளை துடைப்பென் - போரால் எழும் புழுதியை நாளை |