பக்கம் எண் :

576யுத்த காண்டம் 

போக்குவேன்;    ஊழி    வடவை      பொங்கப்படுவது
- ஊழிக்காலத்தே  வடவா  முகாக்கினி   பொங்கியெழுகையில்
உலகோர் அழிவதைப் போன்ற அழிவினை; படுமா பார்த்தி -
போர்க்களத்தில்  நாளை (நீ) பார்ப்பாயே;என்றனன்... - என்று
கூறினான். 
 

(8)
 

6954.

மா அணை நீலக் குன்றத்து இள வெயில் வளர்ந்தது

என்ன,

தூ அணை குருதிச் செக்கர்ச் சுவடு உறப் பொலிந்த

தோளான்,

ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற

பூ அணை மாறி, வேறு ஓர் புனை மணி இருக்கை 

புக்கான்.*

 

மா  அணை  நீலக்குன்றத்து- (இவ்வாறு சார்த்தூலனிடம்
கூறிய   இராவணன்)   பெருமை   பொருந்திய    நீலமலையில்;
இளவெயில் ஊர்ந்தது  என்ன
-   இள  வெயில்  எழுந்தால்
போன்று;   தூ அணை  குருதிச்   செக்கர்  சுவடு   உறப்
பொலிந்த  தோளான்
- தசையோடு  பொருந்திய குருதிக்கறை
பதிந்த   சுவடுகள்    அழுந்திய   அழகிய தோள்களையுடைய
இராவணன். ஏ  அணை  வரிவில் காமன் கணைபட- அம்பு
எய்யும்    தொழிலையுடைய   வரிந்து கட்டப்பட்ட வில்லோன்
ஆகிய மன்மதனின்  கணைகள்  பட்டதனால்;  எரியா நின்ற -
வெப்பம் விளைவித்த; பூ அணை மாறி - மலர்  மஞ்சத்திலிருந்து
மாறி; வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான்- வேறு ஒரு
மணிகள் புனையப் பெற்ற அறையைச் சென்றடைந்தான். 
 

(9)
 

6955.

செய்வன முறையின் எண்ணி, திறத்திறம் உணர்வின்

தேர,

மை அறு மரபின் வந்த அமைச்சரை, 'வருக!'

என்றான்--

பொய் எனப் பளிங்கின் ஆய இருக்கையின் 

புறத்தைச் சுற்றி,

ஐ-இரண்டு ஆய கோடிப் பேய்க் கணம் காப்பது 

ஆக்கி.

 

பொய்   என - (கட்டிடம் இல்லாத)  வெற்றிடம் என்று
புலப்படும்படி; பளிங்கின் இருக்கையின் - பளிங்கினால்