அமைக்கப்பட்ட இருப்பிடத்தினுடைய; புறத்தைச் சுற்றி - வெளிப்புறத்தைச் சுற்றி;ஐயிரண்டாய கோடி பேய்க்கணம் காப்ப ஆக்கி - பத்துக்கோடிப் பேய்க்கூட்டங்களைக் காவல் புரியச் செய்து; செய்வன முறையின் எண்ணி - (பின்பு) செய்யவேண்டுவனவற்றை முறைப்படி சிந்தித்து; திறம் திறம் முறையில் தேரும் - அவ்வவற்றை முறைப்படி தேர்ந்து செயல்பட; மையறு மரபின் வந்த அமைச்சரை- குற்றமற்ற தொல் மரபில் வந்த தனது அமைச்சர்களை; வருக என்றான்- அங்கு 'வருக' என்று பணியாளர்களை ஏவினான். |
பளிங்கின் ஒளி ஊடுருவும் தூய தன்மையால் அது பதித்துக் கட்டப்பட்ட இடம் வெற்றிடம் போன்று தோன்றுமாதலின் "பொய் எனப் பளிங்கின் ஆய இருக்கை" என்றார். |
(10) |
இராவணனது வினா |
6956. | அளந்து அறிவு அரியர் ஆய அமைச்சரை அடங்க |
| நோக்கி, |
| 'வளைந்தது குரங்கின் சேனை, வாயில்கள்தோறும் |
| வந்து; |
| விளைந்தது பெரும் போர் என்று விட்டது; விடாது, |
| நம்மை; |
| உளைந்தனம்; என்ன எண்ணி, என் செயற்கு |
| உரிய?' என்றான். |
|
அளந்து அறிவு அரியர் ஆய அமைச்சரை- அளந்து அறிவினைக் கணிக்க இயலாத அமைச்சர் கூட்டத்தை;அடங்க நோக்கி - முழுவதும் (அளந்து) நோக்கி;வாயில்கள் தோறும் வந்து குரங்கின் சேனை வளைந்தது- கோட்டை வாயில்கள் தோறும் வானர சேனை வந்து வளைந்து நிற்கிறது;பெரும்போர் விளைந்தது என்ன விட்டது - பெரிய யுத்தம் விளைந்தது என்னுமாறு (நிகழ்ந்து) விட்டது;நம்மை விடாது - இனி போர் நம்மை விடாது;உளைந்தனம்- (நாம்) மனம் நொந்துள்ளோம்; என்ன எண்ணி - (இனி) யாம் யாது நினைந்து; என் செயற்கு உரிய? என்றான் - என்ன செய்ய உள்ளோம் என்றான். |
அரியர் என்பதன் விகுதியைப் பிரித்துக்கூட்டி, அளத்தற்கரிய அறிவினையுடைய அறிஞர்கள் ஆகிய அமைச்சர்கள் எனப் பொருள் |