கொழு நிணக்கற்றை `கால - கொழுமையுடைய நிணத்தொகுதி வெளிப்பட்டுச் சொரியுமாறு; தீட்டிய படைக்கை வீர!- கூர்மை மிக்க ஆயுதங்களைக் கரங்களில் ஏந்திய வீரனே! சேனையின் தலைவ!- அரக்கர் படையின் தலைவனே! தெள்ளி ஈட்டிய- தெளிந்து திரட்டிய; அரக்கர் தானை - இராக்கதப் படையில்; இருநூறு வெள்ளம் கொண்டு- இருநூறு வெள்ளம் சேனையை (உன் பொறுப்பில் எடுத்துக்) கொண்டு; நின் பெருங்கிளைகளோடும் - தலைவர் முதலிய படைச்சுற்றத்தாரோடும் (கோட்டையின்) கீட்டிசை வாயில் நிற்றி - கிழக்குத் திக்கு வாயிலில் நிற்பாயாக (என்று ஆணையிட்டான்) |
காலகேயர்-இராவணன் பகைவர். 6951ஆம் பாடலில் கீழ்த்திசை வாயிலில் இராமசேனை நீலன் தலைமையில் 17 வெள்ளத்தோடும் நின்றது குறிக்கப்பட்டது. அதற்கெதிராகப் பிரகத்தன் தலைமையில் இராவணன் அரக்கர் படை இருநூறு வெள்ளத்தை அங்கு அனுப்ப ஆணையிட்டான். நாகலோகத்தில் நின்றும் போர்க்காட்டியவர் என்பது பழைய உரை. |
(18) |
6964. | 'காலன்தன் களிப்புத் தீர்த்த மகோதர! காலையே |
| போய், |
| மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும் |
| கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி-- |
| வெள்ளம் ஆன |
| நால்-ஐம்பதோடும் சென்று, நமன் திசை வாயில் |
| நண்ணி. |
|
காலன் தன் களிப்புத் தீர்த்த மகோதர! - இயமனின் செருக்கினை ஒழித்த மகோதரனே! காலையே போய்- காலத்தோடே சென்று; மால் ஒன்றும் மனத்து- யுத்தப் பித்துக் கொண்ட மனமுடைய; வீரன்! மாபெரும் பக்கனோடும்- வீரனாகிய மாபெரும் பக்கனோடும்; வெள்ளம் நால் ஐம்பதோடும் சென்று - இருநூறு வெள்ளம் சேனையோடும் போய்;நமன் திசை வாயில் நண்ணி- நமன் வாழும் திசையாகிய தெற்குத் திசையையடைந்து; கூலம் கொள் குரங்கையெல்லாம்- வால் கொண்ட குரங்குகள் அனைத்தையும்; கொல்லுதி - கொன்று தீர்ப்பாயாக. |