எல்லா உயிரையும் கொல்லவல்ல செருக்கையும் அழி`த்தவனாதலின் "காலன் தன் களிப்புத் தீர்த்த மகோதரன்" எனப்பட்டான். யுத்தப் பித்துக் கொண்டவன் மாபெரும் பக்கன். மால்-பித்து. வெறி, மகா பாரிசுவன் எனும் வடசொல்லை, மாபெரும் பக்கன் எனத் தமிழ்ப்படுத்தினார் ஆசிரியர். காலை-காலம். "காலையே போய்" இந்தக் காலை நேரத்திலேயே போய் எனினுமாம். மகோதரன் தென்திசை வாயிலில் உள்ள (6952) அங்கதனுக்கெதிராக அனுப்பப்படுகிறான். |
(19) |
6965. | 'ஏற்றம் என், சொல்லின் என்பால்? |
| இந்திரன்பகைஞ!--அந் நாள் |
| காற்றினுக்கு அரசன் மைந்தன் கடுமை நீ கண்டது |
| அன்றோ? |
| நூற்று-இரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் |
| சுற்ற, |
| மேல் திசை வாயில் சேர்தி, விடிவதன் முன்னம்-- |
| வீர! |
|
இந்திரன் பகைஞ! - இந்திரனின் பகைவனாகிய இந்திர சித்தே! என்பால் ஏற்றம் சொல்லின் என்? - (உன்) பெருமையை என்னிடம் சொல்வதால் என்ன பயன்? (எனக்கேதெரியும்)அந்நாள் - இலங்கை எரிந்த அந்த நாளில்; காற்றினுக்கு அரசன் மைந்தன் - காற்றரசனாகிய வாயுவின் மகனான அனுமனுடைய; கடுமை நீ கண்டது அன்றோ? - கடிய ஆற்றலை நீ (கண்ணாரக்) கண்டவன் அன்றோ?வீர! - வீரனே! நூற்றிரண்டு ஆய வெள்ளம் - இருநூறு வெள்ளம் சேனையை; நுன் பெரும் படைஞர் சுற்ற-; உனது பெரும் படையினர் சூழ்ந்து நிற்க மேல் திசை வாயில் -; (இலங்கைக் கோட்டையின்) மேற்குத் திக்கு வாயிலுக்கு;விடிவதன் முன்னம் சேர்தி- விடிவதற்குள் சென்றடைவாயாக! |
அனுமன் பதினேழு வெள்ளம் சேனையோடு மேற்கு வாயிலுக்கு அனுப்பப்பட்டான். அனுமன் வலிமை இலங்கை எரியுண்ட போதும், அசோக வனத்தை அழித்த போதும் அறியப்பட்டுள்ளதாதலின், அவனை எதிர்த்து நிற்க, இந்திரனை வென்ற தன் மகன் இந்திரசித்தையே அனுப்புகின்றான் இராவணன். |
(20) |