பக்கம் எண் :

 அணி வகுப்பு படலம் 585

6966.

'இந் நெடுங் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி

கண்டாய்;

புன் நெடுங் குரங்கின் சேரல் புல்லிது; புகழும்

அன்றால்;

அந் நெடு மூலத்தானைஅதனொடும்,  

அமைச்சரோடும்,

தொல் நெடு நகரி காக்க--விருபாக்க!' என்னச்

சொன்னான்.

 

விருபாக்க! - விருபாக்கனே! இந்நெடுங்காலம் எல்லாம் -
இந்த  (நீண்ட)    நெடுங்காலம்    முழுவதும்;  இமையவர்க்கு
இறுதிகண்டாய்
- தேவர்களோடு போரிட்டு அவர்கள், சாவையே
கண்டுவந்தவன்  நீ;புல்   நெடுங்குரங்கின்  சேரல் புல்லிது -
(இன்று இந்தப்)  புல்லிய   ஆனால் நெடும் தொகையினையுடைய
குரங்குகளின் மேல் நீ (போர் புரியப்) போவது இழிந்தது; புகழும்
அன்று
- உனக்கு அது புகழையும் தராது; (ஆதலால்) அந்நெடும்
மூலத்தானை    அதனொடும்
-    அந்தப்   பெருமைக்குரிய
மூலபலத்துடனும்; அமைச்சரோடும் - மந்திரிமாருடனும்; தொல்
நெடும்   நகரிகாக்க
-  பழமையும் பெருமையும் உடைய இந்த
இலங்கை மாநகரைக்  காப்பாயாக! என்று சொன்னான் - என்று
கூறினான்.
 

விருபாக்கன்-இராவணன் படைத்தலைவர்களுள் ஒருவன்.
 

(21)
 

6967.

'கட கரி புரவி ஆள் தேர், கமலத்தோன் உலகுக்கு

இப்பால்

புடை உள பொருது, கொண்டு, போர் பெறாப்

பொங்குகின்ற

இடை இடை மிடைந்த சேனை இருநூறு வெள்ளம்

கொண்டு,

வட திசை வாயில் காப்பேன் யான்' என வகுத்து

விட்டான்.

 

கமலத்தோன் உலகுக்கு- பிரம லோகத்துக்கு; இப்பால் உள
புடை
-  இப்புறமுள்ள இடங்களில் (எல்லாம்); பொருது கொண்டு
-போரிட்டு  (அவ்விடங்களை  வெற்றி) கொண்டு;  போர்பெறாப்
பொங்குகின்ற
- மேலும் போர் போதாமல் பொங்கியெழுந்தவாறு