பக்கம் எண் :

586யுத்த காண்டம் 

உள்ள;   கடகரி  புரவி  ஆள் தேர் -  மதப்  பெருக்குடைய
யானை, குதிரை, வாள், தேர்ப்படையும் ஆங்காங்கு நெருங்கியுள்ள
சேனை;   இருநூறு    வெள்ளம்    கொண்டு  -   இருநூறு
வெள்ளங்களையும்  கொண்டு;   யானே   வடதிசை காப்பேன்
- நானே வடக்குக்  கோட்டை   வாயிலில்  காக்கும் பொறுப்பை
மேற்கொள்வேன்;  என    வகுத்துவிட்டான்  -  என்று கூறி
(இவ்வாறு) ஆயிரம்  வெள்ளம்  (அரக்க)  சேனையையும் பிரித்து
விட்டான் (இராவணன்)
 

இராமனும்   இலக்குவனும்  வடதிசைக் கோட்டை வாயிலின்
முன்  உள்ளமையால்   வடதிசைப் பொறுப்பைத் தானே ஏற்றான்
இராவணன். பெரிய பொறுப்பினைப் பிறர்க்குத் தள்ளாமல், தாமே
ஏற்கும் அக்காலத் தலைமைப் பண்புகளுள்  ஒன்றைக்   கவிஞர்
சுட்டிச் செல்வது காண்க. 
 

(22)
 

கங்குல் நீங்க, கதிரவன் தோன்றல்
  

6968.

கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம்-காணும்

நலம் கிளர் தேவர்க்கேயோ, நான்மறை

முனிவர்க்கேயோ,

பொலம் கெழு சீதைக்கேயோ, பொரு வலி 

இராமற்கேயோ,

இலங்கையர் வேந்தற்கேயோ,--எல்லார்க்கும் 

செய்தது இன்பம்.

 

கலங்கிய   கங்குல்  ஆகி- (எல்லோரும்) கலங்குவதற்குக்
காரணமாய்   கங்குல்   எனும் பெயர் கொண்டு; நீங்கி கற்பம்-
அகன்ற  ஊழிக்காலமானது; நலம்  கிளர்  தேவர்க்கேயோ?-
(தீயோராம்  அரக்கர்  அழிந்து  நல்லோர்  வாழும்) நலம் காண
அவாவியுள்ள    தேவர்க்கு     மட்டும்தானா?   நான்  மறை
முனிவர்க்கேயோ
-  நான்கு வேதங்களிலும் வல்ல முனிவர்க்கு
மட்டுந்தானா?  பொலம்  கெழு சீதைக்கேயோ ? - பொலிவு
மிக்க   சீதைக்கு   மட்டும் தானா? இலங்கையர் வேந்தற்கேயோ
? -  இலங்கை  மக்களின்  வேந்தனாகிய இராவணனுக்கு மட்டும்
தானா?எல்லார்க்கும்   இன்பம்   செய்தது- (தனித்தனியாக
அல்லாமல்)   இவர்கள்    எல்லோர்க்கும்   ஒரு சேர இன்பம்
விளைத்தது.
 

இராவணனின் துன்பம் நீங்கிக் கதிமோட்சம் பிறந்தது என்று
தேவர்,   முனிவர்க்கும்,   போர் தொடங்கித் தனக்கு விடுதலை
வரும் எனப்