பிராட்டிக்கும். அரக்கனை ஒழிக்க விடியலை விரும்பி நின்றதனால் இராமனுக்கும், போரில் இராமனை வென்று சீதையை யடைவேன் என்று கருதும் இராவணனுக்கும் அந்த இரவு அவர் நினைவால் இன்பம் விளைத்தது. |
(23) |
6969. | அளித் தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் |
| கொடுமை அஞ்சி, |
| வெளிப்படல் அரிது என்று உன்னி, வேதனை |
| உழக்கும் வேலை, |
| களித்தவற் களிப்பு நீக்கி, காப்பவர்தம்மைக் |
| கண்ணுற்று, |
| ஒளித்தவர் வெளிப்பட்டென்ன,--கதிரவன் உதயம் |
| செய்தான். |
|
அளித்தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன்- கருணையெனும் பண்பு இன்றி வலிமையெனும் பண்பு மட்டும் அமைந்தவன் ஆகிய இராவணனுடைய; கொடுமையஞ்சி- கொடுங்கோன்மைக்குப் பயந்து; வெளிப்படல் அரிது என்று- நாம் வெளிப்பட்டு உலவுதற்கு இயலாது என்று;உன்னி - நினைத்து (மறைந்து வாழ்ந்து); வேதனை யழக்கும் வேலை- துன்பத்தால் துவளுங்காலத்து; களித்தவன் களிப்பு நீக்கி- செருக்குற்ற அவனின் செருக்கினை அழித்து; காப்பவர் தம்மைக் கண்ணுற்று- பாதுகாக்கும் செங்கோல் வேந்தனைக் கண்டு;ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன - மறைந்திருந்த குறு நிலமன்னர் வெளியே புறப்பட்டாற் போல, கதிரவன் உதயம் செய்தான் - சூரியவன் (கீழ்வானில்) உதித்தான். |
கொடுங்கோலனுக்கு அஞ்சி மறைந்து வாழ்ந்தோர் செங்கோல் வேந்தன் தோன்ற வெளிப்பட்டாற்போல, இராவணன் கொடுமைக்கு அஞ்சி மறைந்திருந்த கதிரவன் இராமன் வருகையில் மறைவிடம் நீங்கி எழுந்தாற்போல் தோன்றினான் எனத் தற்குறிப்பேற்ற அணி திகழ உரைத்தார். |
(24) |
வானர சேனை இலங்கையை வளைத்தல் |
6970. | உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்கத் |
| தூர்ப்ப, |
| அளப்ப அருந் தூளிச் சுண்ணம் ஆசைகள |
| அலைக்க, பூசல் |