| இளைப்ப அருந் தலைவர், முன்னம் ஏவலின், |
| எயிலை முற்றும் |
| வளைத்தனர், விடிய, தத்தம் வாயில்கள்தோறும் |
| வந்து. |
|
விடிய - பொழுது விடியும் போது; அளப்ப அரும் தூளி சுண்ணம்- அளவிட முடியாத புழுதித் தூசுகள்;ஆசைகள் அலைக்க - திசைகளை மோத; உளைப்புறும் ஓதவேலை- ஒலிக்கின்ற நீர்ப்பெருக்கினைக் கொண்ட கடலின்;ஓங்கு அலை நடுங்க- ஓங்குகின்ற அலை ஓசை அடங்குமாறு (அத்தூசுகள்) தூர்ப்ப - (கடலைத்) தூர்தது மேபிக்க; பூசல் இளைப்ப அருந்தலைவர் - போரிடுதற்கு இளையாத வானரப் படைத்தலைவர்கள்;முன்னம் ஏவலின்-முன்பு ஏவிய ஆணையின் வண்ணம்; தத்தம் வாயில்கள் தோறும்- அவரவர்க்குரிய இலங்கைக் கோட்டை வாயில் தோறும்; வந்து வளைத்தனர் - வந்து வளைத்துக் கொண்டனர். |
(25) |
6971. | தந்திரம் இலங்கை மூதூர் மதிலினைத் தழுவித் |
| தாவி, |
| அந்தரக் குல மீன் சிந்த, அண்டமும் கிழிய ஆர்ப்ப, |
| செந் தனிச் சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல, |
| இந்திரன் தொழுது வாழ்த்த, இராமனும் எழுந்து |
| சென்றான். |
|
தந்திரம் - வானரப் படையானது; இலங்கை மூதூர்- இலங்கையாகிய தொல் நகரின்; மதிலினைத் தழுவி தாவி - மதிலினை நெருங்கிப் பாய்ந்தவாறு: அந்தரக் குலமீன் சிந்த - வானத்து நட்சத்திரங்கள் மண்ணில் விழுமாறு;அண்டமும் கிழிய- அண்ட கோளம் கிழிந்து விடுமாறும்;ஆர்ப்ப- ஆரவார முழக்கம் இட; தனிச்செஞ்சுடரோன் சேயும்- ஒப்பற்ற சிவந்த கிரணங்களையுடைய கதிரவன் புதல்வனாகிய சுக்கிரீவனும்; தம்பியும்- இலக்குவனும்;முன்பு செல்ல- முன்னே செல்ல; இந்திரன் தொழுது வாழ்த்த- (வானில்) இந்திரன் வணங்கி வாழ்த்தா நிற்க;இராமனும் எழுந்து சென்றான் - இராமபிரானும் (போர்க்களத்தை நோக்கி) எழுந்து வந்தான். |