பக்கம் எண் :

 அணி வகுப்பு படலம் 589

தந்திரம்-படை    வடசொல். "தந்திரக்கடலை நீத்தி"  (கம்ப.
7340) என்பர் மேலும். கதிரவனே நிலா   முதலியவற்றிற்கு ஒளி
வழங்குபவன் ஆதலின், "தனிச்செஞ்சுடரோன்" எனப்பட்டான்.
 

(26)
 

அரக்கர் சேனையை வளைத்தல்
 

6972.

நூற் கடல் புலவராலும் நுனிப்ப அரும் வலத்தது 

ஆய

வேற் கடல்-தானை ஆன விரி கடல்

விழுங்கிற்றேனும்,

கார்க் கடல் புறத்தது ஆக, கவிக் கடல் வளைந்த 

காட்சி,

பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது, அப் பதகன்

மூதூர்.

 

அப்பதகன்  மூதூர் -   அந்தப் பாதகனான இராவணனின்
தொல்நகரமாகிய இலங்கை; கடல் நூல்   புலவராலும் - கடல்
போன்ற   நூல்களைக் கற்ற புலமை நிறைந்தோராலும்; நுனிப்ப-
நுண்ணிதின்   உணர;அரும் வலத்தது ஆய- இயலாத வலிமை
வாய்ந்ததாகிய;   கடல்  வேல் தானை ஆன- கடல் போன்று
வேல்  ஏந்திய படைத்தொகுதியான அரக்கர் சேனை ஆன; வரி
கடல்  விழுங்கிற்றேனும்
  -  விரிந்த சமுத்திரத்தால் விழுங்கப்
பெற்றிருந்தது    ஆனாலும்;கார்க்கடல் புறத்தது ஆக- கரிய
கடல்   பக்கத்தே  சுற்றி நிற்க; கவிக்கடல் வளைந்த காட்சி
- வானரப் படையெனும் கடல் வளைத்து நிற்கும்  காட்சியானது;
பாற்கடல்    அழுவத்து உள்ளது
- பாற்கடற்பரப்பின் உள்ளே
உள்ளது;ஒத்தது- (ஒரு நகரம்) போன்றிருந்தது.
 

குரங்குச்  சேனை பாற்கடலாகவும்,  அது சுற்றியுள்ள பெரிய
அரக்கர் சேனை கருங்கடலாகவும் உருவகிக்கப்பட்டன. அழுவம்
-பரப்பு, பதகன்-பாதகன்-கொடும்பாவம் புரிந்தவன்.பதகன் துரந்த
உரகம் (கம்ப. 8264) "வெய்யன் பதகன் பரதார விருப்பன் வீணன்"
(அரிச். 4. இந்திர.35)
   

(27)
 

6973.

அலகு இலா அரக்கன் சேனை அகப்பட, அரியின் 

தானை,

வலைகொலாம் என்ன, சுற்றி வளைத்ததற்கு உவமை

கூறின்,