பக்கம் எண் :

590யுத்த காண்டம் 

     

கலை குலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த

காலத்து

உலகு எலாம் ஒருங்கு கூடி, ஒதுங்கினவேயும் 

ஒக்கும்.

 

அலகு   இலா   அரக்கர்     சேனை   அகப்பட-
அளவுக்கடங்காத  அரக்கர்   சேனை தனக்குள் அகப்படுமாறு;
அரியின் சேனை
-குரங்குப் படையானது; வலை கொல் ஆம்
என்னச் சுற்றி
- ஒரு வலையோ என்னுமாறு சூழ்ந்து கொண்டு;
வளைத்ததற்கு உவமை கூறின்
- வளைத்து நின்றதற்கு உவமை
கூறுவோமென்றால்;கலை  குலாம்   பரவை  ஏழும்- ஆடை
போன்றதெனப் புகழப்பட்டுப் பல   உலகங்களையும் சுற்றியுள்ள
ஏழு கடல்களும்;   கால்    கிளர்ந்து  எழுந்த காலத்து -
ஊழிக்காற்றுப் பொங்கியெழுந்த   ஊழிக்காலத்தே; உலகெலாம்
ஒருங்குகூடி
    -  உலகம்   யாவையும்       ஒன்றாகக்கூடி;
ஒதுங்கினவேயும்  ஒக்கும்
- ஒருபுறமாக ஒதுங்கி நின்றதையும்
ஒப்பாகக் கூறலாம்.
 

ஊழிக்காலத்தே  உயிர்கள்  ஓரிடத்தே ஒதுங்கும் கற்பனை,
விவிலிய நூலில் கடல் கோளுக்குத் தப்பிய உயிர்கள்  "நோவா"
(நாவாய்)    எனும்   கப்பலில்   ஒதுங்கிப் பிழைத்து மீண்டும்
பெருகியதாக    வருவதோடும்,  ஊழியின்  முடிவில்  திருமால்
ஆலிலையில்   பள்ளி  கொண்டு உயிர்களைத் தன்  வயிற்றில்
அடக்குவதோடும் ஒரு சார் ஒப்பு நோக்கத்தக்கதாம்.
 

 (28)