பக்கம் எண் :

592யுத்த காண்டம் 

(தன் அருகிருந்த) வீடணனை நோக்கி; 'ஒள்ளியது உணர்ந்தேன்'
என்று- (இப்போது செய்யத்தக்க) புகழுக்குரிய செய்கை ஒன்றை
(இப்போதுதான்) உணர்ந்தேன் என்று;   உரைப்பது ஆனான் -
சொல்லத் தொடங்கினான். 
 

(1)
 

6975.

'தூதுவன் ஒருவன்தன்னை இவ் வழி விரைவில் 

தூண்டி,

"மாதினை விடுதியோ?" என்று உணர்த்தவே,

மறுக்கும்ஆகின்,

காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது; அறனும்

அஃதே;

நீதியும் அஃதே' என்றான்--கருணையின் நிலயம்

அன்னான்.

 

கருணையின்     நிலயம் அன்னான் - உலகத்தில் உள்ள
கருணையெல்லாம்   நிலைத்திருக்கும்   நிலையம் போன்றவனான
இராமபிரான்,  (வீடணனை நோக்கி);இவ்வழி -இவ்விடத்திலிருந்து;
தூதுவன்   ஒருவன்    தன்னை
- ஒரு தூதுவனை; விரைவில்
தூண்டி
-   (இராவணனிடம்)   விரைவில் அனுப்பி;   மாதினை
விடுதியோ?  
-     (இப்பொழுதாவது)   'சீதையை  விடுதலை
செய்கிறாயா?'    என்று    உணர்த்தவே- என  வினவி (நாம்
அவனுக்கு)  அறிவுறுத்தினால்;  மறுக்கும் ஆகின்- (இப்போதும்
அவன்) (விடமுடியாது என) மறுப்பான் ஆகில்; காதுதல்  கடன்
என்று
-(அவனை)அழித்தல் நம் கடமையென்று;உள்ளம் கருதியது
-  என்  மனம்   எண்ணிற்று;அறனும் அஃதே - (என் உள்ளம்
கருதுவதே)   அறம்   ஆகும்;   நீதியும்  அஃதே என்றான் -
அதுவே நீதியும் ஆகும் என்று கூறினான்.
 

'பன்னீர்க்குவளை      பன்னீர்     வாசனை   தவிர வேறு
என்தரக்கூடும்?'   என்பது   போல  இறைவனுக்கு,    'கருணை
இயல்பான  குணம்;  கோபம்   வந்தேறி"  என்பார்  நம்பிள்ளை.
கருணையின் நிலையம் அன்னான் - கருத்துடையடைகொளியணி.
 

(2)
 

வீடணன் முதலியோர் வரவேற்க, இலக்குவன் மறுத்தல்
 

6976.

அரக்கர் கோன் அதனைக் கேட்டான், 'அழகிற்றே 

ஆகும்' என்றான்;

குரக்கினத்து இறைவன் நின்றான், 'கொற்றவர்க்கு

உற்றது' என்றான்;