பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 593

'இரக்கமது இழுக்கம்' என்றான், இளையவன்; 'இனி,  

நாம் அம்பு

 

துரக்குவது அல்லால், வேறு ஓர் சொல் உண்டோ?

என்னச் சொன்னான்.

 

அரக்கர்  கோன் -  அரக்கர்களின்  மன்னனாக ஆக்கப்
பெற்றுள்ள   வீடணன்;  அதனைக் கேட்டான் - இராமபிரான்
கூறிய  சொற்களைக் கேட்டு; அழகிற்றே ஆகும் என்றான் -
நன்றாயுள்ளது என்று பாராட்டினான்; குரக்கினத்து இறைவன்-
வானரங்களின்   மன்னனாகிய  சுக்கிரீவன்; நின்றான்- எழுந்து
நின்றவனாய்; கொற்றவற்கு ஏற்றது என்றான்- (அரச தருமம்
கடைப்பிடிக்கும்)    வேந்தருக்கு     ஏற்றதே  இது என்றான்;
இளையவன் 
-  இளையோன் ஆகிய இலக்குவன்; இரக்கமது
இனி  இழுக்கு  என்றான்
  -  (அரக்கனிடம்  இனி) இரக்கம்
காட்டுவது   இழுக்காகும்   என்றான்;நாம் அம்பு துரக்குவது
அல்லால்
-  நாம் இனி (அவ்வரக்கனிடம்) அம்பைச் செலுத்தி
அம்பால்  சொல்வது அன்றி; வேறு ஓர் சொல் உண்டோ?-
(சொல்லால்  பேசுவதற்கு)   வேறு  ஓர் சொல்லும் உண்டோ?
என்னச் சொன்னான்
- என்று வெகுண்டு கூறினான்.
 

தனக்கு  அரசுரிமை வேண்டும் என்ற நினைவின்றித் தன்
தமையனாகிய இராவணன் போரில் மாளாது இராமனால் உய்தி
பெறவேண்டும்    எனும்   நினைவினனாகி, இராவணன் பால்
தூதனுப்புவதனை,  "அழகிற்றே   ஆகும்"   என   மொழிந்த
வீடணன் உள்ளத்தை அவ்விரண்டே சொற்கள் காட்டும்.
 

(3)
 

6977.

'தேசியைச் சிறையில் வைத்தான்; தேவரை 

இடுக்கண் செய்தான்;

பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்; மன்னுயிர் புடைத்துத்

தின்றான்;

ஆசையின் அளவும், எல்லா உலகமும் தானே

ஆள்வான்,

வாசவன் திருவும் கொண்டான்; வழி அலா வழிமேல் 

செல்வான்.

 

தேசியைச்   சிறையில்   வைத்தான்- (நீ தூது விட
நினைக்கும்  அவ்வரக்கன்   இராவணன்)   கற்பின்    ஒளி
வடிவினளான பிராட்டியைச் சிறையில் (வஞ்சத்தால் கவர்ந்து)
வைத்துள்ளான்;    தேவரை    இடுக்கண்   செய்தான்-
தேவர்கட்குச் (சொல்லொணாத்)